Onetamil News Logo

சமூக ஆர்வலர்களை அரசு  ஊக்கப்படுத்த வேண்டும்‌ விஞ்ஞானி.வெ.பொன்ராஜ் கருத்து

Onetamil News
 

சமூக ஆர்வலர்களை அரசு  ஊக்கப்படுத்த வேண்டும்‌ விஞ்ஞானி.வெ.பொன்ராஜ் கருத்து


மதுரை 2019 அக்டோ 14 ;மதுரை சங்கமம்" சார்பில் சமூக ஆர்வலர்கள் சந்திப்பு ஞாயிறன்று மாலை மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் சமூகப்பணி சாதனையாளர் விருதினை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்  அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ்  மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் எஸ்.வடிவேல் முருகன், மூத்தப்பத்திரிகையாளர் ப.திருமலை, புரட்சிக் கவிஞர் மன்றம் பி.வரதராசன், தேசிய வலிமை நேதாஜி சுவாமிநாதன், சமம் குடிமக்கள் இயக்கம் வழக்கறிஞர்.சி.சே.இராசன்  ஆகியோருக்கு வழங்கினார்.
அவர் தன்னுடைய சிறப்புரையில் அரசுகள் சமூக ஆர்வலர்களின் பணிகளை  ஊக்கப்படுத்தி அவர்களை அங்கீரிக்கவேண்டும். சிந்தனையும் செயலும் உண்மையானதாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்றார்.
விருது பெற்றுக்கொண்டவர்கள் சார்பில் சமம் குடிமக்கள் இயக்க மாநிலத் தலைவர வழக்கறிஞர். சி.சே.இராசன், "காந்தியின் 150 வயது ஆண்டு விழா நிறைவுற்றிருக்கும் இவ் வேளையில் கிராமங்கள் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறவேண்டும். கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து  தொடர் விழிப்புணர்வும், மதச்சார்பின்மை கருத்துக்களையும், தீண்டாமைக்கு எதிரான இயக்கங்கங்களையும், மதுவுக்கு எதிரான போராட்டங்களையும் நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை களம் அமைப்பு கோ. வரதராஜன் வரவேற்றார். நிகழ்வின் நோக்கம் குறித்து அப்பு அறக்கட்டளை சு.சிவசோமசுந்தரம் எடுத்துரைத்தார்.  நிகழ்ச்சியினை பால்சாமி ஒருங்கிணைத்தார். நிறைவாக ஹக்கீம் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo