Onetamil News Logo

மதுவிலக்கை வலியுறுத்தி கறுப்பு அட்டை அணிந்து போராட்டம் ;தமிழக மது ஒழிப்பு இயங்கங்கள் முடிவு

Onetamil News
 

மதுவிலக்கை வலியுறுத்தி கறுப்பு அட்டை அணிந்து போராட்டம் ;தமிழக மது ஒழிப்பு இயங்கங்கள் முடிவு


மதுரை  2019 நவம்பர் 6 ;மதுவிலக்கை வலியுறுத்தி கறுப்பு அட்டை அணிந்து போராட்டம் தமிழக மது ஒழிப்பு இயங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம்  மதுரையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. இராசன் தலைமை வகித்தார். அமைப்பின் ஆலோசகர்கள் சுயஆட்சி இந்தியா அமைப்பின் தேசிய துணைத்தலைவர் கிறிஸ்டினா சாமி, மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில அளவில் நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினார்கள். பின்னர் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களாவது:
1.தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மீதான வன்முறைக்கும் எதிரான நாளான நவம்பர் 25 முதல் மனித உரிமை நாளான டிசம்பர் 10வரை தொடர்ந்து 16நாட்கள்  "மதுவின் பிடியிலிருந்து குடும்பங்களயும் குழந்தைகளையும் காப்போம்'என்ற பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படும்.
2. நவம்பர் 25 அன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் பெண்கள் மீதான வன்முறைக்கும் காரணமான மதுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
3. மதுவுக்கு எதிராக கருப்பு அட்டை அணிந்து 16நாள் பிரச்சாரங்களை மக்கள் மத்தியிலும், பள்ளி/கல்லூரி மாணவர் மத்தியிலும் மதுவுக்கு எதிரான சிந்தனையை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது.
4. 2016 தேர்தல் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பூர்ண மதுவிலக்கை தங்கள் தேர்தல் அறிக்கையில் முன்வைத்தன. மது விலக்கின் அவசியம் கருதி அனைத்து அரசியல் கட்சிகளையும் மீண்டும் சந்தித்து வலியுறுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
5.குடி நோயாளிகள் தமிழகத்தில் அதிகமாகி இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களையும் மறுவாழ்வு மையங்களாக உருவாக்க வேண்டும். அங்கு சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு சிகிச்சை காலங்களில் உதவி தொகை வழங்க வேண்டும்.
6.குடியால் உயிர் இழந்த  குடும்பங்களுக்கு அரசு 10லட்ச ரூபாய் நிதியும்,அரசு வேலையும்,குழந்தைகளுக்கு கல்வியும் வழங்கப்பட வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo