Onetamil News Logo

டாஸ்மார்க் ஒரு சந்ததியினரை கொலை செய்து வருகிறது;24 மணி நேரம் செயல்படும் மது  கடைகள் மேல் மீது நடவடிக்கை தேவை ; தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின்  மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் குற்ற சாட்டு     

Onetamil News
 

டாஸ்மார்க் ஒரு சந்ததியினரை கொலை செய்து வருகிறது;24 மணி நேரம் செயல்படும் மது  கடைகள் மேல் மீது நடவடிக்கை தேவை ; தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின்  மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் குற்ற சாட்டு     


மதுரை 2018 டிசம்பர் 8 ;டாஸ்மார்க் தமிழகத்தின் சமுக பாதுகாப்புக்கு அச்சத்தை விளைவித்து ஒரு சந்ததியினரை கொலை செய்து வருகிறது.சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரம் செயல்படும் மது  கடைகள் மேல் நடவடிக்கை எடுக்காத மண்டல மேலாளர்கள் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின்  மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் குற்ற சாட்டுகின்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி மெயின் ரோட்டில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யும் பெட்டிகடையில் அதிகாலை 5மணிக்கே  மது வாங்கி குடித்த கவுண்டன்பட்டியை சேர்ந்த முருகன், பள்ளப்பட்டியை  சேர்ந்த சமயன் பாஞ்சாலங்குறிச்சி சேர்ந்த தங்கபாண்டி ஆகிய மூன்று கூலி தொழிலாளர்களும் மது அருந்திய அரை மணி நேரத்தில் போதையில் ஒவ்வொருவரும் தனித்தனியாக மயங்கி விழுந்து வாயில் நுரை தள்ளியப்படி முருகன் அங்கேயே இறந்து விட்டார்.மற்ற  இரண்டு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியிலேயே சமயன்  என்பவரும்  உயிரிழந்துள்ளார்.இவ்வாறு பரிதாபமான உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வழக்கை விசாரணை செய்துள்ள  அம்மை நாயக்கனுர் போலீஸார் தொழில் போட்டியில் விஷம் கலந்த மது கொடுக்கப்பட்டதாகவும் அதனால்  6 பேர் மேல் கொலை வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்
மக்களிடம் கேட்டபோது... இந்த பெட்டிகடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்துவருகிறார்கள். இது காவல்துறைக்கும்,அதிகாரிகளுக்கும் தெரியும் என்கின்றனர்.போலி மது பிரச்னையால் ஏற்கனவே பலர் பலியாகி உள்ளனர்.  10 நாட்களுக்கு முன்பு கூட இதுபோல இப்பகுதியில் ஒருவர் இறந்துள்ளாக கூறுகின்றனர். போலி மது, விற்பனை, இதில் ஈடுபடும் நபர்கள் குறித்து எஸ்.பி., மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., கலெக்டர், உள்துறைச் செயலர் வரை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் .  இல்லை என்கின்றனர் மக்கள். 
இச்சம்பவத்தில்  ஆளும் அரசியல் பிரமுகர்கள் பின்னணியில் இருப்பதாலும். போலீஸ் மற்றும் நிர்வாகிகளின் அலட்சியமே, அப்பாவிகளின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது அதனால் அவர்கள் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படும் மது விற்பனை கடைகள் அதிகரித்து வருகின்றன அதனை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.மது பான விற்பனைக்கு 'டார்கெட் 'வைப்பது நிறுத்தப்பட வேண்டும்.எதிர் கால சந்ததியின்  நலன் கருதி பூரண மதுவிலக்கை தமிழகத்தில் நடமுறைப்படுதத அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo