Onetamil News Logo

நீட் தேர்வால் நடக்கும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிடவேண்டும் ;சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

Onetamil News
 

நீட் தேர்வால் நடக்கும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிடவேண்டும் ;சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை


மதுரை 2020 செப் 13; நீட் தேர்வால் நடக்கும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிடவேண்டும் ;சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமம் குடிமக்கள் இயக்க மாநிலத்தலைவர் ;வழக்கறிஞர் சி.சே.ராஜன் தன்னுடைய அறிக்கையில் கூறியதாவது....
நீட் தேர்வு என்பது மிகப்பெரிய சமூக அநீதியாக உள்ளது.இதன் விளைவாக மாணவர்களின் மருத்துவ கனவு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.
நீட்தேர்வு மாணவர்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.அதனால் வாழவேண்டிய வயதில் உள்ள மாணவர்கள் தொடர் தற்கொலைக்கு உள்ஆகுகின்றனர்.இது மிகுந்த மன வேதனைக்குரியதாக உள்ளது.மாணவர்களின் உயிர் இழப்பிற்கு  மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் தொடர் உயிர்இழப்பால் தமிழகமே சோகத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்நேரத்தில் நீட்தேர்வு நடத்துவது என்பது முறையாகாது. அதனால் மாணவர்கள் நலன்கருதி உயர்நீதிமன்றமும்,தேசிய மனித உரிமை ஆணையமும்,குழந்தைகள் உரிமை ஆணையமும்  உடனடியாக தலையிட்டு மாணவர்கள் உயிர்காக்க முன்வர வேண்டும்.  மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நீட் தேர்வானது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களின்  மனஅழுத்தத்தையும்,அச்சத்தையும் போக்க  வேண்டும்.மாணவர்களின் வாழ்வுரிமையானது பாதுகாக்கப்பட வேண்டும்.என சமம் குடிமக்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo