Onetamil News Logo

கொரோனா நோய்க்கு மத சாயம் பூசி வெறுப்பு அரசியல் உருவாக்குபவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்கள் ;கொரோனாவால் மனித குலமானது பேராபத்து ;நாட்டைக் காப்போம் இயக்கம் கண்டனம்.

Onetamil News
 

கொரோனா நோய்க்கு மத சாயம் பூசி வெறுப்பு அரசியல் உருவாக்குபவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்கள் ;கொரோனாவால் மனித குலமானது பேராபத்து ;நாட்டைக் காப்போம் இயக்கம் கண்டனம்


மதுரை 2020 ஏப்ரல் 2 ;மத நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் : நாட்டைக் காப்போம் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டைக்காப்போம் இயக்கத்தின் மையக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் விடுக்கும் அறிக்கை.
இச்சூழலில்  தமிழகத்தில் கொரோனா நோய் கிருமி பரவலாக்கத்திற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்று மதவாத  சக்திகள் விஷம பரப்புரையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்கு உரியது.  உலகத்தில் வாழும் அனைத்து மக்களையும் தாக்கும் தன்மைக் கொண்ட கொடிய நோய் தான் கொரோனா. இந்தியாவில் இந்த நோய் எல்லா மதத்தினரையும்  எல்லா மாநிலத்தினவரையும்  பாதித்து வருகின்றது. டெல்லி தப்லீக் ஜமாத் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்களையும் இந் நோய் பாதித்துள்ளது. டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்  கொள்ள  அரசு அழைத்த உடன் அவர்கள் தானாக முன் வந்து   முழுமையான ஒத்துழைப்பை  கொடுத்துள்ளனர். .அதே நேரத்தில் அவர்கள்  ஏற்கனவே மருத்துவ பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் என்பதும் முக்கியமானது. 
கொரோனாவை எதிர்த்து அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்த கருத்துடன்  மக்கள் போராடி  கொண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும் இருக்கும் நிலையில் சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பரப்புரை பரப்புவதும்,குரோத மனப்பானமையுடன் மனவலியை உருவாக்குவதும்  நாட்டிற்கு நல்லதல்ல.
வெளிநாட்டிலிருந்து வருவோரை  பரிசோதனை செய்யும் அதிகாரமும் பொறுப்பும்  பெரும் கூட்டங்களை தடைசெய்வதற்கான அதிகாரமும் மத்திய அரசிடம் இருந்தும் மத்திய அரசு  அதனை  செய்யத் தவறிவிட்டது. 
கொரோனோவின் பாதிப்பு  இந்தியாவில் ஜனவரி  மாதத்தில் இருந்தப்போதும் பிப்ரவரி முழுவதும் இந்தக் கிருமியின் பரவலைத் தடுப்பதற்கு  மத்திய அரசு  எதையும் செய்யவில்லை; அதைக் கையாளுவதற்கான எவ்வித தயாரிப்பையும் மேற்கொள்ளவுமில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாழ்த்துவதற்காக, ஆயிரக்கணக்கானவர்களுக்கு நோய்த்தொற்று ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்துள்ள பெரும் கூட்டங்களையும் அணிதிரட்டல்களையும் மத்திய அரசு நடத்திக் கொண்டிருந்தது. 
கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட பெரும் கூட்டங்களை நடத்துவதோடு நாடாளுமன்ற கூட்டங்களையும் நடத்திக் கொண்டிருந்தனர்; மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பைக் கொண்டாட, மார்ச் 24 அன்று ஒரு பெரும் கூட்டமே கூடியிருந்தது.
தில்லி தப்லின் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் பலருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போன்று பல்வேறு  பெரிய மத நிகழ்ச்சிகளில், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுள் எத்தனைபேருக்கு தொற்றுப் பாதிப்பு இருக்கிறது என்று கண்டறிவதும் மிக அவசியம்.  இதனை மத்திய அரசு பொறுப்பேற்று செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாம் உலக போருக்கு பிறகு மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என ஐ.நா.பொது செயலாளர் சொல்லியிருக்கிறார். இந்த உலகமே  மனித ஒருமைப்பாட்டின் அரவணைப்புக்காக அழுது புலம்பி கொண்டிருக்கிறது இச் சூழலில் நம் இந்தியாவில் மத வெறுப்பு அரசியலும், கிருமிக்கு மத சாயம் பூசுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று .இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மனித சமூகத்தால் மன்னிக்கப்பட மாட்டார்கள். அது மட்டும்  அல்ல இத்தகைய தீய சக்திகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நாட்டைக்காப்போம் இயக்கத்தினர் தங்கள் அறிக்கை மூலம் தெரியப்படுத்தி உள்ளனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo