Onetamil News Logo

பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது - நீதிபதிகள்

Onetamil News
 

பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று;அவர்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது - நீதிபதிகள்


மதுரை 2019 மார்ச் 14 ; தமிழகத்தில் பத்திரிக்கையாளர் நல வாரியத்தை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் சுமார் 8000 செய்தியாளர்கள், செய்தித்தாள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூக பாதுகாப்பு குறைபாடு காரணமாக பல்வேறு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தியாளர்கள் பலர், குறைந்த ஊதியத்தில் உடல்நலம் மற்றும் குடும்பத்தை கவனிக்காமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் சிறுவயதிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு செய்தியாளர்கள் உயிர் இழக்கும் நிலையும் உருவாகின்றது. இதனால் அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாகவும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் செய்தியாளர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லை. செய்தியாளர்களுக்கான நல வாரியமும்  இல்லை. இதனால் அவர்களுக்கான பாதுகாப்பு,சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகளை பெறுதல்  ஆகியவற்றில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பத்திரிக்கையாளர்களை பொருத்தவரை, சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளை வெளிக்கொணர்வதால் அவர்களின் உயிருக்கும் எப்போதும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற சட்டங்களோ பத்திரிக்கையாளர் நல வாரியமோ இல்லை. ஆகவே தமிழகத்தில் பத்திரிக்கையாளர் நல வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ்.சுந்தர் அமர்வு, பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே, பத்திரிக்கையாளர் நல வாரியத்தை அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலர் பதிலளிக்க  வேண்டும். அதே சமயம் பத்திரிக்கையாளர்களும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்து  வழக்கை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo