Onetamil News Logo

விவாதம் இல்லாத மக்கள் மன்றம் ஜனநாயகத்திற்கு விரோதமானது ;நாட்டைக்காப்போம் அமைப்பு கண்டனம்

Onetamil News
 

விவாதம் இல்லாத மக்கள் மன்றம் ஜனநாயகத்திற்கு விரோதமானது ;நாட்டைக்காப்போம் அமைப்பு கண்டனம்


மதுரை 2020 செப் 14 ;நாட்டைக் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் சட்டமன்ற, பாராளுமன்ற கூட்டங்கள் நடைப்பெறாமல்  தள்ளி போய் உள்ளன. பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரானது செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1வரை நடைபெறுகிறது. அதே போன்று தமிழக சட்டமன்ற கூட்டம் செப்டம்பர் 14  ஆம் தேதியிலிருந்து 3நாட்கள் மட்டும் நடக்கின்றன.
கொரோனா தொற்று காலக்கட்டத்தில், மக்களின் உயிர் இழப்புகள் அதிகமாக நிகழ்ந்து மக்களின் வாழ்வாதாரமானது  முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில்  மக்களின் அன்றாட தேவைகள் அதிகம் இருக்கின்றன. கொரோனா தொற்றை தடுக்க  மத்திய அரசும், தமிழக அரசும் கையாண்ட விதம், கொரோனா காரணம் காட்டி நடக்கும் அத்துமீறல்கள், ஊழல்கள் இவை குறித்து கட்டாயம் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அவையில் விவாதிக்கப்பட வேண்டும்.
அதே போன்று இந்தியாவில் பெரிய விவாதப் பொருளாகவும், மக்களை பெரும் அளவில் பாதிக்கும் வகையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு திருத்த மசோதா, தேசிய கல்விக்கொள்கை போன்ற புதிய சட்டவரைவுகள், மசோதாக்கள், மாநில அரசின் அதிகார பறிப்புகள்  குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய அவசரகாலத்தில் நாம் உள்ளோம்‌.
 ஆனால் `எம்.பி-க்கள் எழுத்து மூலமாகக் கேள்விகள் கேட்கலாம்’ என்றும், `கேள்வி நேரத்தை அரை மணி நேரம் மட்டும் வைத்துக்கொள்ளலாம்’ என்றும் அரசுத் தரப்பில்  கூறப்பட்டிருக்கிறது. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மக்களால் மக்களுக்காக மக்களால் ஆட்சி செய்யப்படுவது தான் ஜனநாயகம். நீதியையும்,சுதந்திரத்தையும், பாதுகாக்கும் கருவியாக ஜனநாயகம் உள்ளது. ஆளும் கட்சியின் நலனை மட்டும் பாதுகாக்கும் கருவியாக ஜனநாயகத்தை பயன்படுத்துவது  ஜனநாயகத்திற்கு மிக பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிதில்லை! நாங்கள் நினைத்தை விவாதமின்றி  நிறைவேற்றுவோம் என்று  பாராளுமன்றத்தை, சட்டமன்றத்தை  நடத்துவது என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
எல்லோருக்கும் சமநீதி, வறுமை மற்றும் பசியற்ற வாழ்கை, கவுரவமாக வாழும் சுதந்திரம், கவுரவமான ஊதியம், பாலின மற்றும் சாதிய பாகுப்பாடு இன்மை, கட்டாய இலவச கல்வி மற்றும் மருத்துவம், பொது சுகாதாரம்,அனைவருக்கும் சமவாய்ப்பு,தேசிய சொத்துக்களை வளங்களை பாதுகாத்தல் போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிப்போய் கொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் நாடு தவறாக வழி நடத்தப்படக்கூடாது என நாட்டைக் காப்போம் அமைப்பு கவலைக்கொள்கிறது.
எதையும் விவாதிக்க வழியில்லை என்றால் எதற்கு பலகோடிகள் செலவழித்து பாராளுமன்ற சட்டமன்ற கூட்டங்கள் நடத்த வேண்டும். விவாதம் இல்லாமல் எதிர்கட்சிகளின் கலந்தாலோசனை இல்லாமல் அரசாங்கத்தை வழிநடத்துவது என்பது ஜனநாயக படுகொலையாகும்.
.மக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிகழக் கூடாது, மனித உரிமைகள் முற்றிலும் மறுக்கப்படக்கூடாது, பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை இழக்காத வகையில் பாராளுமன்ற சட்டமன்ற விவாதங்களில் எதிர்கட்சிகள் பங்கேற்று ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு கோருகிறது என கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo