Onetamil News Logo

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு! சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்

Onetamil News
 

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு! சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்


மதுரை 2019 அக்டோபர் 5 ;பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய எழுத்தாளர் ராமசந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமம் குடிமக்கள் இயக்கம்,மாநிலத்தலைவர்,வழக்கறிஞர்.சி.சே.இராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது......நாட்டில் சிறுபான்மை,தலித் மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரைப் பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில்,“நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது” என்பது உள்ளிட்ட பல கருத்துகளை அந்தக் கடித்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பீகார் முசாபர்பூரில் ராம்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உள்ளிட்ட 50 பிரபலங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்து , நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேசத் துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளக தெரிகிறது.
இதுக்குறித்து சமம் குடிமக்கள் இயக்க மாநிலத்தலைவர் வழக்கறிஞர் சி.சே.இராசன் அவர்கள் கூறும் பொழுது  நாட்டின் நன்மதிப்பையும் தேசத்தையும் காப்பாற்றுங்கள் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததற்காக தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது ஜனநாயகத்திற்கும்,கருத்து சுதந்திரத்திற்கும் விரோதமானது. அதனால்   பிரதமர் ஜனநாயக நலன்கருதி  இவ் வழக்கில்  நேரடியாக  தலையிட்டு தேச நல விரும்பிகளின் மீது போடப்பட்டுள்ள  இவ் வழக்கினை  திரும்ப பெற முன்வர வேண்டும் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo