Onetamil News Logo

சேலம் என்கவுண்டர்-  மாநில மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்.சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை 

Onetamil News
 

சேலம் என்கவுண்டர்-  மாநில மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் ;சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை 


மதுரை 2019 ஏப்ரல் 3 ;சேலம் என்கவுண்டர்-  மாநில மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்று சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.                                                                                                                                                                                                                                                         சமம் குடிமக்கள் இயக்கம்,வழக்கறிஞர்.சி.சே.ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...சேலம் அருகே காரிபட்டியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம்  குறித்து சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வக்கீல்.சி.சே.ராஜன் தன்னுடைய அறிக்கையில்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சேலத்தில் பல ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி இருந்தது. சட்டரீதியாக மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் எடுத்த முயற்ச்சியினை  உரிமை சார்ந்த  அமைப்புகள் வரவேற்றன.இந்த நிலையில் இப்போது என்கவுண்டர் நடந்துள்ளது.'என்கவுண்டர் 'என்ற பெயரில் சட்டத்திற்கு மீறி நடக்கும் கொலைகளை மனித உரிமை மீறலாகதான் பார்க்க வேண்டும்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ளது எம்.தாதனூர். இந்த ஊரைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் கதிர்வேல். இவரது வயது 25. இவர் மீது அடிதடி, வழிப்பறி மற்றும் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மாதம் அயோத்தியாபட்டணம் தேவாங்கர் காலனியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் கொலை வழக்கில் காரிப்பட்டி போலீசார் கதிர்வேலைத் தேடி வந்துள்ளனர்.
மே1 காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் கதிர்வேலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளார் .
மே 2 காரிப்பட்டி ஆய்வாளர் சுப்பிரமணியம் நடத்திய விசாரணையில், அயோத்தியாப்பட்டணம் அருகிலுள்ள குள்ளம்பட்டியில் ஒரு இடத்தில் கணேசனைக் கொலை செய்த ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் அதனைக் கைப்பற்றும் வகையில், போலீசார் காலையில் அந்த இடத்துக்கு கதிர்வேலை அழைத்துச் சென்றதாகவும்அப்போது, பாதுகாப்புக்கு சென்ற போலீசாரைத் தாக்கிவிட்டு கதிர்வேல் தப்பியோட முயன்றுள்ளதாகவும். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்  காயமடைந்த கதிர்வேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர்.. ஆய்வாளரைக் கத்தியால் தாக்க முயன்றதால் என்கவுண்டர் நடத்தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் உள்ளன.
இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்.குற்றவாளி 1ஆம் தேதியே காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது குற்றவாளிக்கு எப்படி ஆயுதங்கள் வந்தன?போலிஸ் இறந்தவரை நேரடியாக மார்பை பார்த்து சுட காரணம் என்ன?அப்படி என்றால் திட்டமிட்டு இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதா?குற்றவாளியை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் மார்பை பார்த்து சுட்டிருப்பதால் எதை மறைப்பதற்காக இச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது ?என பல்வேறு கேள்விகள் எழும்புகின்றன.
இதற்கு எல்லாம் அரசு பதில் சொல்ல வேண்டிய  கடமையுள்ளது.சட்டத்தின் ஆட்சியின் மேல் மக்களுக்கு நம்பிக்கை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.அந்த வகையில் இச் சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக இந்த வழக்கை  எடுத்து விசாரித்து நீதியை நிலைநாட்ட முன் வர வேண்டும் என கேட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo