Onetamil News Logo

நெல்லை கண்ணனை விடுதலை செய்யவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் வலியுறுத்தல்

Onetamil News
 

நெல்லை கண்ணனை விடுதலை செய்யவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் வலியுறுத்தல்


மதுரை 2010 டிசம்பர் 3 ;நெல்லை கண்ணனை விடுதலை செய்யவேண்டும் சமம் குடிமக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.இது குறித்து சமம் குடிமக்கள் இயக்கம் தலைவர் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....                                                                                                                                                              
 தமிழகத்தின் மூத்த இலக்கியவாதியும், தலைசிறந்த பேச்சாளருமான 'தமிழ் கடல்' என்று அழைக்கப்படுகின்ற நெல்லை கண்ணன் அவர்கள் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த குடியரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கருத்துக்களை பா.ஜ.க.கட்சியினர்  தவறாக சித்தரித்து கட்சிதலைவர்களின்  தூண்டுதல் பேரில் தமிழக காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளதை சமம் குடிமக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. 
அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. உள்ளிட்ட நடவடிக்கைக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர்  போராட்டங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த டிச.29, 2019 அன்று, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக நெல்லை கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். 
அவரது உரையில்  எந்தவித உள் நோக்கமும் இல்லாமல்  பாஜக ஆட்சியின் மோசமான செயல்பாடுகளின் மீதான விரக்தியையும், அறச்சீற்றத்தையும் அவருக்கே உரித்தான நையாண்டியோடு எப்போதும் பேசுவது போல் எளிய நடையில்  வெளிப்படுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது கோபமாக உள்ள தமிழக அரசு பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாக நெல்லை கண்ணன் அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்து, உடல் நலம் குன்றிய நிலையில்,. அவரை கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையானது போராட்டத்தை திசை திருப்புவதற்காக அரசு எடுத்துள்ள முயற்சியாகவே தெரிகிறது.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்வி குறியாகி வருகிறது. ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டவர்களை சென்னையில் கைது செய்தனர். ஜனநாயக வழியில் எதிர்ப்பு குரலை எழுப்பும் மனித உரிமை காப்பாளர்கள், மாணவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இது கருத்துரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.
உள்நோக்கத்துடன் வன்முறை மேடைப் பேச்சுக்களை பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய போது  பல புகார்கள் அளித்தும் கூட எந்த விதமான  கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை  தமிழக காவல்துறை. 
மத்தியில் அதிகாரம் கொண்டவர்கள் என்பதற்காக பாஜகவின் புகாரின் பேரில் அராஜகமாக நெல்லைக் கண்ணனைக் கைது செய்தது என்பது கண்டிக்கதக்கது. இது போன்ற பழிவாங்கும் கைது நடவடிக்கைகள், மருத்துவ சிகிக்சை பெறும் மருத்துவமனைகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
எனவே, நெல்லை கண்ணன் அவர்கள் மீதான வழக்கை தமிழக காவல்துறை வாபஸ் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் .அவருக்கு நடந்த உரிமை மீறலை மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அச்சம் கலந்த சூழலை போக்க வேண்டியதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியதும் அரசின் கடமை. அரசு தவறும் பட்சத்தில்  நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் தலையிட்டு மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo