Onetamil News Logo

இன, மத, சாதீய பாகுப்பாட்டிற்கு எதிராக இணைந்து போராட வேண்டும் : நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை

Onetamil News
 

இன, மத, சாதீய பாகுப்பாட்டிற்கு எதிராக இணைந்து போராட வேண்டும் : நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை


மதுரை  2020 வியாழக்கிழமை மே 4  ;  அமெரிக்காவில் கருப்பு  இனத்தை சார்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் நிற மற்றும் இனவெறிப் படுகொலை. அமெரிக்காவின் இனவெறிக்கு எதிராக அனைத்து நாடுகளும் மனிதக்குலத்தை காக்க இணைந்து செயல்பட வேண்டும். .அதேபோல் இந்தியாவிலும் மதம் மற்றும் சாதீய பாகுப்பாட்டிற்கு எதிராக  அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என நாட்டைக்காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். சி.சே. இராசன் கோரியுள்ளார்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில், மே 25 அன்று கையில் விலங்கிட்ட நிலையில் ஒரு காரின் டயருக்கு அடியில்  ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் கிடத்தப்பட்டு, அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்தி கொடூரமாக கொலை செய்தார். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை கண்டித்து கொரோனா வைரஸ் ஊரடங்கையும் மீறி அமெரிக்கா முழுவதும் அனைத்து மாகாணங்களிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. .
வாஷிங்டனில் வெள்ளை மாளிகைககு அருகிலும் போராட்டங்கள் நடக்கின்றன. .அமெரிக்காவில் நடைப்பெற்று வரும் இனப்பாகுப்பாட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் புதிய வரலாற்றின் துவக்கமாக உள்ளது.
இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இனவாதத்திற்கு ஆதரவாக ராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்குவேன் என்கிறார். இச்சூழலில் அனைத்து உலக நாடுகளும் இனவெறி பாகுப்பாட்டிற்கு எதிராக, இனவெறி மற்றும் நிறவெறி படுகொலைக்கு எதிராக  போராட்டக்கார்களுக்கு ஆதரவாக ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும். 1968இல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் நிகழும் பெரிய இனக் கொந்தளிப்பாக இதனை உலக நாடுகள் பார்க்கின்றன,
என்றாலும் அமெரிக்காவில் நிறவெறி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வீட்டிலிருந்தபடியே உணவை ஆர்டர் செய்வது அமெரிக்காவில்க சகஜம். ஆனால் கருப்பினக் குடியிருப்புகளுக்கு மாத்திரம் இந்தச் சேவை வசதி அதிகமாகக் கிடையாது. அமெரிக்காவெங்கும் 1800 கிளைகளைக் கொண்டிருக்கும் ஷோனி என்ற பிரபலமான உணவக நிறுவனத்துக்கு எதிராக, 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை கறுப்பின மக்கள் தொடுத்த வழக்குகளில், அதன் நிறவெறிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நஷ்டஈடாக மாத்திரமே 105 மில்லியன் டாலரைச் செலுத்தியிருக்கிறது அந்த நிறுவனம். அதேபோல 1500 கிளைகளைக் கொண்டிருக்கும் டென்னி என்ற நிறுவனம் இதேகாலத்தில் 55 மில்லியன் டாலரை நட்டஈடாகச் செலுத்தியிருக்கிறது.
இன்றைக்கு இந்த நிறுவனங்கள் தமது பிராண்ட் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்றே அடக்கி வாசிக்கின்றன.  இப்போது கருப்பர்களுக்கென்றே தனிக் கிளைகள் நடத்தப்படுகின்றன. மேலும் கருப்பின மக்கள் நெருங்கமுடியாத உயர்கட்டணங்களைக் கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள் வர்க்கரீதியாக வெள்ளை நிறவெறியை நிலைநாட்டுகின்றன. இது பிரபலமான உணவகங்களின் கதை.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் போலீசு தலைமையகத்தில் இருக்கும் கணினித் திரைகளில் “ஒரு நீக்ரோவை எதிர்கொண்டால் முதலில் சுடு! பின்பு கேள்வி கேள்!’ என்ற முத்திரை வாக்கியமே முன்பு ஒளிர்ந்து கொண்டிருக்குமாம். இப்படிப் போலீசுத்துறை முழுவதும் புரையோடியிருக்கும்  நிறவெறியைச் சகிக்க முடியாமல், அமெரிக்காவின் போலீசுத் துறைகளில் மிக அரிதாகவே இருக்கும் கருப்பின அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நின்று கொண்டிருந்த அப்பாவிக் கருப்பின இளைஞர் அமடோ தியாலோ, போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தது தூரத்திலிருந்த போலீசுக்கு துப்பாக்கி போல தெரிந்ததாம்! இதை எதிர்த்தும் கருப்பின மக்கள் போராடினர். ஆனால் நீதி கிடைக்கவில்லை.
அப்படியென்றால் வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்தது ஏன் எனக கேட்கலாம். உலகைச் சுரண்டும் அமெரிக்காவிற்கு உலக ஏழை நாடுகளின் மனதில் பதியும் ஒரு நெருக்கமான முகம் அமெரிக்க அதிபராக இருந்தால் முதலாளிகளுக்கு ஆதாயம்தானே! தென் ஆப்ரிக்காவில் 90 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் வெள்ளையர்கள் ஏதுமில்லாத கருப்பர்களை திருப்தி செய்ய நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்து கருப்பர்கள் கையில் ஆட்சியைக் கொடுக்கவில்லையா? இன்றைக்கு கருப்பர்கள் ‘ ஆண்டுகொண்டிருக்கிறார்கள்’. வெள்ளையர்கள் சொத்துக்களை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தென்ஆப்ரிக்க உண்மை அமெரிக்காவிற்கும் பொருந்தும். இதையெல்லாம் விட ஒபாமாவின் தெரிவு அமெரிக்காவில் நிறவெறியை இல்லாமல் ஆக்கிவிடுமா? ஆகாது என்பதற்கு அமெரிக்காவின் சமீபத்திய வரலாறே சாட்சி. சமீபத்திய அமெரிக்காவில் கொரோனாவில் அதிகம் இறந்தவர்கள் கறுப்பினத்தவர்கள் தான்.
  இந்தியாவில் இப்போது  வெறுப்பு அரசியலோடு மதரீதியான, சாதீய ரீதியான பாகுப்பாடுகளும் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்று ஊரடங்குகாலத்திலும் இதே பாகுப்பாடுகள் தொடரும் அவல நிலையே நீடிக்கிறது .தமிழகத்திலும் சாதீய தீண்டாமை கொடுமைகள்  தினம் தினம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள அரியாகுஞ்சூர் ஊராட்சியில் சின்ன சுல்தான்பாடி கிராமம் . பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்  ஊராட்சி மன்ற தலைவராக பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த திரு.முருகேசன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அவரது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் நடந்த  துக்க நிகழ்வில்  ஊராட்சி மன்ற  தவைவர் என்ற முறையில் கலந்துக் கொண்டு அவரும் அவரது மனைவியும் இறந்து போன உடலுக்கு மாலை போடக்கூட முயன்றபோது மாற்று சமூகத்தினர் அனுமதிக்கவில்லை. அவரை சவக்குழி தோண்ட கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளனர். இப்படிதான் இட ஒதுக்கீடு மூலம்  தேர்வு செய்யப்படுகிற பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல்.
திருவிழாவிற்கு, இறப்பிற்கு  மேளம் அடிக்க வேண்டும் .ஊர் அடிமை வேலை செய்ய வேண்டும். தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது, தேசியக் கொடியை ஏற்றக்கூடாது, கிராமசபைக் கூட்டங்களில் பேசக்கூடாது. இருசக்கர வாகனத்தில வரக்கூடாது, பெயர் பலகைகளில் தலைவர் பெயரை சிறியதாகவும் துணைத் தலைவர் பெயரை பெரியதாகவும் எழுதி வைப்பது. நிர்வாகத்தில் பஞ்சாய்த்து தலைவர் ஆலோசனை இல்லாமல்   முடிவெடுப்பது  என பல்வேறு வகைகளில் தீண்டாமைக் கொடுமைகள் பல வடிவங்களில் இனனும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய நிலப்பரப்பில் இத்தகைய கொடுமைகள் எல்லா பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன.. அதனால் தான் 2002இல் தென் ஆப்பிரிக்கா டர்பனில் இனவெறிக்கு எதிராக நடந்த பன்னாட்டு மாநாட்டில்   சாதிய பாகுபாடும் இனப்பாகுபாடே என பேசும் பொருளாக  அமைய வேண்டும் என இந்தியா முழுவதும் குரல் கொடுக்கப்பட்டன. இனவெறியை விட சாதிய வெறி கொடுமையானதாக இந்தியாவில் தலைத்தூக்கி நிற்கிறது. அதேப் போன்று மத வெறியும், மத அடிப்படையில் குடியுரிமைகள் மறுக்கும் சூழலும் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தான அடக்கு முறை சூழலானது நீண்டக்காலம் நீடிக்க முடியாது. உலக அளவில் இனப்பாட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் அதே வேளையில் இந்தியாவில் மதப்பாகுப்பாட்டிற்கு எதிராகவும், சாதீய பாகுப்பாட்டிற்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo