Onetamil News Logo

போதைப் பொருட்களின் விபரீதம் குறித்து தமிழக அரசு பள்ளிப்பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Onetamil News
 

போதைப் பொருட்களின் விபரீதம் குறித்து தமிழக அரசு பள்ளிப்பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்


மதுரை 2019 ஜூன் 26 ;போதைப் பொருட்களின் விபரீதம் குறித்து தமிழக அரசு பள்ளிப்பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு  அறிவித்துள்ளது.                                   
                                                                                                                                                            தமிழக மதுஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின மாநில கருத்தரங்கம் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் தலைமையில் மதுரையில்  நடைப்பெற்றது.

இக் கருத்தரங்கில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம்,சமம் குடிமக்கள் இயக்கம்,சுவாதி பெண்கள் இயக்கம்,தீபம் பெண்கள் இயக்கம்,தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம்,தேன்சுடர் பெண்கள் இயக்கம்,மக்கள் சட்ட உரிமை இயக்கம்,கிராம வழிக்காட்டிக்குழு போன்ற அமைப்புகளின் மாநில பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
இக்கருத்தரங்கில் மூத்தப்பத்திரிகையாளர் ப.திருமலை கருத்துரை ஆற்றினார். அவர் தன்னுடைய கருத்துரையில் உலகம் முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். உலகில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.உலகில் 15-64 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்புள்ள சந்தையில்18% இந்தியாவில் இருக்கின்றனர்.இப்பிரிவினரை குறிவைத்துதான்  போதை பொருள் சந்தை முக்கியமான இருக்கும் என்று போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது என்றார். மேலும் அவர் பேசும் போது இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட 3ஆயிரத்து647 தற்கொலையில் ஆயிரத்து572 தற்கொலைகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன.552 தற்கொலைகளுடன் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும்,கேரளா 475 தற்கொலைகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன என்றார்.
அதனை தொடர்ந்து பங்கேற்பாளர்கள் தங்கள் கள அனுபவம் மூலம் பள்ளி குழந்தைகள் இன்று போதை பழக்கதிற்கும்,மது பழக்கத்திற்கும்  அதிகமாகி வருகின்றனர் என்றும் இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல்  பாதியிலே நிறுத்தி விடுகின்றனர்.குடியின் காரணமாக விபத்துகள் அதிகமாகி வருகின்றன.மதுவானது டாஸ்மார்க் கடைகளில் மட்டுமில்லாமல் சிறுசிறு பெட்டி கடைகளிலும் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை ஆகிறது. மதுவின் காரணமாக கணவனை இழந்த பெண்கள் அதிகரித்து வருகின்றனர்.பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன போன்ற கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்..
கருத்தரங்க முடிவில் கீழக்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தமிழக அரசு போதை பொருட்களின் விபரீதம் குறித்து பள்ளிப்பாடங்களில் பாடதிட்டங்கள் மூலம் விழிப்புணரவு உருவாக்கவேண்டும்.

மக்களின் நலன்கருதி புகையிலை,சிகரெட்,மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை அரசே விற்பனை செய்வதை  நிறுத்த வேண்டும்.
மதுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு கிராம சுகாதர நிலையத்திலும் தனியாக மறுவாழ்வு மையங்கள் உருவாக்கி சிகிச்சை வழங்க வேண்டும்.சிகிச்சை பெறும் காலங்களில் குடும்பத்திற்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதற்கான நிதியை தமிழக பட்ஜெட்டில் அரசு ஒதுக்க வேண்டும்.இதுக்குறித்து தமிழக முதல்வரை தமிழக மது ஒழிப்பு இயக்கத்தின் மாநில குழு சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் விபரீதம் குறித்து விழிப்பிணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை, நாடக போட்டிகளை தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மற்ற இயங்களுடனும்,தமிழக கல்வி துறையோடும்  இணைந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக தமிழ் மாநில பெண்கள் கூட்டமைப்பின் தலைவி அருண்மொழி நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo