Onetamil News Logo

தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாரிஸ், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் ஆகியோர் தான் காரணம் ;எஸ்.ஐ.பால்துரை மனைவி மங்கையர்திலகம் பரபரப்பு பேட்டி 

Onetamil News
 

தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாரிஸ், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் ஆகியோர் தான் காரணம் ;எஸ்.ஐ.பால்துரை மனைவி மங்கையர்திலகம் பரபரப்பு பேட்டி 


மதுரை 2020 ஆகஸ்ட் 11 ;சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு கைதி எஸ்.ஐ.பால்துரை உடலுக்கு 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. 
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்ஐ பால்துரைக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவர் மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு முன், பால்துரையின் மனைவி மங்கையர்திலகம், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘‘எனது கணவருக்கு சர்க்கரை, ஆஸ்துமா உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால், சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் பால்துரைக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் இறந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலை 5 மணியளவில் அறிவித்தது. இத்தகவல், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவி மங்கையர் திலகம், மகன் பிரவான் (30) ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து கதறியழுதனர்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதானவர் என்பதால், எஸ்ஐ பால்துரையின் இறப்பு குறித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மனைவி மங்கையர்திலகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு சுகாதாரத் துறையினர் வழிகாட்டுதல்படி, மதுரை தத்தனேரி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரை நகர் போலீஸ் துணைக்கமிஷனர் சிவபிரசாத், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, மாலை 5 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பால்துரை உடல் தகனம் செய்யப்பட்டது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்த கொலை வழக்கிற்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் அவரை 10வது குற்றவாளியாக கைது செய்துள்ளனர். தட்டார் மடம் காவல்  நிலையத்தில் பணியில் இருந்த எனது கணவரை, ஒரு வாரம் மட்டுமே சாத்தான்குளத்திற்கு மாற்றுப்பணியாக அனுப்பினர். இந்த வழக்கில் எனது கணவரை தொடர்புபடுத்த, தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாரிஸ், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் ஆகியோர் தான் காரணம். எனது கணவரிடம் ஒருமுறை கூட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. இத்துடன் கொரோனா தொற்றும் பாதித்ததால் இறந்துள்ளார். அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்’’’’ என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo