Onetamil News Logo

மதுரையில் உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டிச.15ல் குமரியில் மாநில மாநாடு நடத்த முடிவு 

Onetamil News
 

மதுரையில் உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
டிச.15ல் குமரியில் மாநில மாநாடு நடத்த முடிவு 


மதுரை 2019 அக்டோபர் 10 ;மதுரையில் நடந்த உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழகத்தின் ஆலோசனைக்கூட்டத்தில் வரும் டிசம்பர் 15ல் கன்னியாகுமரியில் மாநில மாநாட்டை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நகரிலுள்ள லிபர்டி டவரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் செல்வின்குமார் தலைமை வகித்தார். மாநில கொள்கைபரப்பு செயலாளர் லதாநாயர், மண்டல தலைவர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மோகன்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு பதவி பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர்.  அதனைத்தொடர்ந்து, அமைப்பின் மூலமாக ஏழை-எளிய மக்கள், மாணவ, மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்குரிய அரசின் சலுகைளை பெற்றுக்கொடுத்திடுவதற்கான பணிகளை தாமே முன்வந்து மேற்கொள்வது, முடிந்தவரை அனைத்து மக்களுக்கும் அமைப்பின் மூலமாக உணவு, உடை உள்ளிட்டவைகளை வழங்கி உதவுவது, ஏழை&எளியவர்கள் மற்றும் சமூகத்தில் பிறரால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக பெற்றுக்கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி கன்னியாகுமரியில் மாநில மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்துவது என்றும் மாநாட்டில் பலலட்ச ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயலாதவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அணி திரண்டு வந்து பங்கேற்று சிறப்பித்திடவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், குமரி மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட ஒருங்கிணைப்பு கழக பொறுப்பாளர் கோபிநாதன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் சுந்தர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் அய்யப்பன், துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் ராஜப்பா வெங்கடாச்சாரி, செயலாளர் துரை, துணைச்செயலாளர் பார்த்தீபன், மதுரை மாவட்ட தலைவர் முத்துமணிகண்டன், செயலாளர் நம்பிராஜன், பொருளாளர் ரமேஷ், துணைச்செயலாளர் கார்த்திகேயன், துணைத்தலைவர் பழனிக்குமார், மருத்துவர் லெட்சுமிரகுராம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிபுதியராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாநில கொள்கைபரப்பு செயலாளர் லதாநாயர் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo