சிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பாராட்டுச் சான்றும் வழங்கினார்.
சிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பாராட்டுச் சான்றும் வழங்கினார்.
மதுரை 2021 ஜனவரி 26 ;மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த கேரன் பப்ளிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 10 வயதுள்ள ஜெ. அதீஸ்ராம் என்ற சிறுவனுக்கு 72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பாராட்டுச் சான்றும் வழங்கினார்.இவ்விருதானது கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-15 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக வழங்கப்பட்டது.
கடந்த 17-19 நவம்பர் 2018ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்று தங்க பதக்கம் (1st Y.S.C.D.F National Games 2018-19) வென்றுள்ளார்.2020 National Sports & Physical Fitness Board “International Sports Star Award” விருதை ஜெ.அதீஸ்ராம் வென்றுள்ளார்.