Onetamil News Logo

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் :  சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

Onetamil News
 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் :  சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை


மதுரை 2020 பிப்ரவரி 17; குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் :  சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமம் குடிமக்கள் இயக்கம்.,மாநிலத்தலைவர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....
சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ., என்,ஆர்,சி., என்,பி,ஆருக்கு எதிராக அமைதியான முறையில் ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது காவல்துறை கொடூரமானத் தாக்குதலை நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமம் குடிமக்கள் இயக்க மாநில தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் கூறியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், இந்திய தலைநகர் டெல்லி சாஹின் பாக்கில் தொடர் போராட்டத்தின் மூலம்  சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக  மக்கள் தங்கள் கருத்துக்களை அரசுக்கு முன் வைத்து வருகின்றனர். அதே போன்று  தமிழகத்திலும  ஜனநாயக ரீதியில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முன்வரும் அமைப்புகளுக்கு  தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதோடு அனைத்து அமைப்பினர் மீதும்  காவல்துறை வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருவது  ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறை செயல் ஆகும். இந்நிய அரசியல் சாசனத்திற்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளதால் இந்தியா முழுவதும்  மக்கள் போராட்டங்கள் தன் எழுச்சியாக உருவாகி வருகின்றன. இந்தப் போராட்டங்களை தமிழக அரசு  காவல்துறையின் உதவியோடு அடக்கி ஒடுக்கலாம் என நினைப்பது சுதந்திர உரிமைக்கு எதிரானது. இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார்கள். எனவே தமிழக அரசு மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து  தமிழக சட்ட மன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்ற  தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை உணர்ந்து மதசார்பற்ற தன்மையை  பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும், 
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தனிமைப்படுத்தி இழுத்துச் செல்வது, அவர்களை கடுமையாக தாக்குவது மற்றும் பொய் வழக்கு தொடர்வதை அரசு கைவிட வேண்டும். ஒரு சிலரை கைது செய்வதன் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சி.ஏ.ஏ. போராட்டங்களை நீர்த்து செய்யலாம் என தமிழக அரசு நினைக்காமல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும்  வகையில் மக்கள் கருத்துக்கும்,மதசார்பற்ற தன்மைக்கும்,ஜனநாயக வழிமுறைகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முன்வர  வேண்டும் என கேட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo