Onetamil News Logo

மீனவர்களின் பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயிரழந்த மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும்

Onetamil News
 

மீனவர்களின் பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயிரழந்த மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும்


மதுரை 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை ;தேங்காய்பட்டிணம் மீன்பிடித்துறைமுக தடுப்பணை அகற்றப்பட வேண்டும் - தமிழக மீன்பிடித்துறை முகங்கள் சீர்படுத்தப்பட வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் விடுத்துள்ள அறிக்கையில்..
 தமிழகத்தில்  மீனவர்களின் இழப்புகள் வேதனைகள் கொரோனா காலக்கட்டத்திலும் தொடர் கதைகளாகி வருகின்றன.  சூன் 13 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து  4 பேருடன் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு 14 ஆம் தேதி அதிகாலை  2 மணி அளவில் கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்களின் முயற்சியால் சேசு என்ற மீனவர் 16ஆம் தேதி மீட்கப்பட்டார். உடன் சென்ற மீனவர்களான ரெஜின் பாஸ்கர், மலர் வண்ணன், ஆஸ்ட்டின் சுஜீந்தர்  ஆகிய  மீனவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந் நிலையில் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை மீனவர்களை காப்பாற்ற எந்த  நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போன்று இராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு மீனவர்களின் உதவியால் சூன்19,20,21ஆம் தேதி களில் மீனவர்களின்  உடல்கள்  மீட்கப்பட்டன. .
கடல் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீனவர்களையும் படகுகளையும் பாதுகாப்பதற்காக மீனவர்களின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட தேங்காய்பட்டினம்  மீன்பிடித் துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் மீனவர்களோடு கலந்த திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் துறைமுகத்திற்குள் அலை அடிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் ஆனி, ஆடி மாதங்களில் எழும் இராட்சத அலையில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் பலியாவது வழக்கமான வேதனை தரும் நிகழ்வாக மாறிவருகிறது.
 தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் முகத்துவாரத்தில் மணல் நிரம்பியுள்ளதால் கடந்த 23-7-2020 அன்று காலையில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற முள்ளூர்துறையைச் சேர்ந்த அந்தோணி ( 68) என்பவர் அலையில் சிக்குண்டு படகு கவிழ்ந்ததில் காணாமற்போனார். அதே போன்று 24-7-2020 அன்று மாலை நாட்டுப்படகில் கரை திரும்பியபோது துறைமுக இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மார்த்தாண்டந்துறையைச் சார்ந்த ஷிபு (வயது 25) என்பவரும் உயிர்இழந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எதிர்பாராத விபத்துகளினால் பேராபத்து ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும்  துறைமுக விபத்தில் சிக்கி மீனவர்கள் பலி ஆகிறார்கள் என்பது வேதனையான உண்மை.
துறைமுக முகத்துவாரத்தில் இருந்து மணல் மேடுகளை  அகற்றாததால் மீனவர்களின் உயிர் பலியாகிறது. அதனால் இதற்கு காரணமான மீன்வளத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நீரோடி துறை, மார்த்தாண்டம் துறை, வள்ளவிலை, இரவிபுத்தன்துறை, சின்னத்துரை, தூத்தூர், பூத்துறை, இறைமன்துறை, முள்ளூர் துறை, ராமன் துறை, புத்தன்துறை, இணையம், ஹெலன் நகர், மேல்மிடாலம், மிடாலம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 3800 நாட்டுப்படகு, 800 பைபர் படகு மீனவர்கள் தங்கள்   விசைப்படகுகளில் ,நாட்டுப்படகுகளில்,கட்டுமரங்களில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்..
அலைகளை தடுப்பதற்காகவே மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு உள்ளேயே மணல்மேடு நிரம்பியுள்ளது  தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுக தவறான கட்டுமானத்தால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மீன் வளத்துறை அதிகாரி இடமும் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் அதிகாரியிடமும் மீனவர்கள் கோரிக்கை வைத்தும் ஏதும் நடக்காத காரணத்தால் உயிர்பலி தொடர்கிறது.
எனவே, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை நிர்வாகமும் மீன்பிடித் துறைமுக நிர்வாகமும் உடனடியாக மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உருவாகி இருக்கும் மணல் மேடுகளை அகற்றவும் மணல்மேடுகள் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ள தடுப்பணையை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். துறைமுகத்தில் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சிறந்த கட்டுமான வல்லுநர்களையும் மீனவப் பிரதிநிதிகளையும் கொண்டு குழு அமைத்து துரிதமாக கட்டுமான பணிகளை நிறைவு செய்யவேண்டும்.
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலும் இராமேஸ்வரத்திலும்  இறந்து போன, காணாமல் போன மீனவர்களுக்கு  தலா 25 லட்சம்  ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்  இறந்துப்போன மீனவர்களின் குடும்த்தில் உள்ள ஒரு நபருக்கு அரசாங்க வேலை வழங்கி மீனவர்களின் பாதுகாப்பையும்,தொடர் உயிர் இழப்புகளையும் ,வாழ்வாதாரத்தையும் இனி வரும் காலங்களில் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்  என்று நாட்டைக்காப்போம் அமைப்பு அரசை கோருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo