Onetamil News Logo

அரசு முழு பொறுப்பெடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் ;நியூட்டிரினோ திட்டம் கைவிட வேண்டும்.இயற்கை பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்

Onetamil News
 

அரசு முழு பொறுப்பெடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் ;நியூட்டிரினோ திட்டம் கைவிட வேண்டும்.இயற்கை பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்


மதுரை 2020 மதுரை 9 ;இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் தொடக்கவிழா மாநாடு தேனியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மாநாட்டிற்கு ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார்.சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் முன்னிலை வகித்து மாநாட்டை ஒருங்கிணைப்பு செய்தார்.  ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர். சலேத் வரவேற்றார்.கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள், தமிழ் மாநில பெண்கள் இயக்கம்,பென்னிகுக் உழைக்கும் பெண்கள் உரிமை இயக்கம்,கிராம முன்னேற்ற இயக்கம்,தேன் சுடர் பெண்கள் இயக்கம்,மலை மாடுகள் வளர்போர் சங்கம்,சமுக செயல்பாட்டு இயக்கம்,தமிழக மது ஒழிப்பு இயக்கங்கங்களின் கூட்டமைப்பு என பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் பெரும் அளவில் கலந்துக்கொண்டனர்.
மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர். நல்லுசாமி,மக்கள் கண்காணிப்கம் இயக்குனர் வழக்கறிஞர்.ஹென்றி டிபேன்,தமிழர் நல பேரியக்க தலைவர் இயக்குனர்.மு.களஞ்சியம்,தமிழ்த் தேச மக்கள் முன்னணி தலைவர்.மீ.தா.பாண்டியன்,ஐடியாஸ் மைய இயக்குனர். பால்மைக், ஐந்து மாவட்டவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர். ச.அன்வர்,தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர். வழக்கறிஞர். முத்துராமலிங்கம்,வழக்கறிஞர்.இரா.ச.சுபாஷினி, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் வழக்கறிஞர்.பால்பிரிட்டோ,தமிழக மதுஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசகர். டி.வி.முருகேசன், தேன் சுடர் பெண்கள் இயக்க ஆலோசகர்.கருத்தம்மா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.மாநாட்டின் தீர்மானங்களை ராஜாமணி,இந்திரா, பொன்னுதாய்,சேகர்,இன்பசேகரன் ஆகியோர் முன் மொழிந்தனர்.16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் ;
1.இயற்கை வளங்களை பாதுகாக்க, அரசு முழு பொறுப்பெடுத்து அதற்கென்று அதிகாரமுள்ள  சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும்.
2.நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  மணற்கொள்ளை,இயற்கை வளங்களை பாதிக்கும் கிரானைட் பாறை வெட்டுதல்,மலைகளை வெட்டி பாறை மண் தயாரித்தல் தடுக்கப்பட வேண்டும்‌.நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு முறையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.
3.'வளர்ச்சி' என்றப் பெயரில் விவசாய நிலங்களை அழித்து அரசு மேற்க்கொள்ளும்  திட்டங்களையும்,மக்களின் வாழ்வினையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்க போகின்ற நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். 
 4 ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
5.பெருநகரங்களின் கழிவுநீரை ஆறுகளில் கலப்பதற்கு தடை விதிக்க வேண்டும்
6.ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அள்ளுவதற்கு நிரந்தரத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
7..குடிமராமத்து திட்டத்தை கூடுதலாக விரிவாக்கம் செய்து,  ஓடைகளும், வாய்க்கால்களும், கண்மாய்களும் தூர்வாரப்பட வேண்டும் அதற்கென்று அரசுநிதி  ஒதுக்கப்பட வேண்டும்.
8.மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தூர்வாரப்பட வேண்டும்.
9.தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நகராட்சியிலும், பேரூராட்சியிலும்  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும்
 10..2006 ஆம் ஆண்டு வன சட்டத்தின்படி இயற்கையோடு இணைந்து வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
11.மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
12.காப்பு காடுகளின் பரப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.வனவிலங்கு வேட்டை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
13.நீர்நிலை ஆக்கிரமிப்பு தேசிய குற்றமாக பதிவு செய்யப்பட வேண்டும்.ஆற்றின் இருமருங்கிலும் ஆண்டு முழுவதும் நீர் சுரக்கும் நீர்மருத வகை மரங்களை நடவு செய்ய வேண்டும்.
14.அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயமாக்கப்பட வேண்டும். விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும்,நில மாபியாக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை அரசு முழுமையாக கண்காணித்து சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
15.மீத்தேன்,பாறை எரிவளி ஆகியவற்றுக்கான ஆய்வுகளை நிறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட  வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்.
16.கடல் வளம் மற்றும் மீனவர் வாழ்வுரிமைகளை பறிக்கும் திட்டங்களைஅரசு கைவிட வேண்டும்.சாகர் மாலா திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிறைவாக சமுக செயல்பாட்டு இயக்கம் தேனி மாவட்ட அமைப்பாளர்.த.ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo