Onetamil News Logo

எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தம்;சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்

Onetamil News
 

எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தம்;சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்


மதுரை 2019 ஆகஸ்ட் 25 ;காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவித்தது. 
 இதுகுறித்து சமம் குடிமக்கள் இயக்கம்,மாநிலத் தலைவர்,வழக்கறிஞர் சி.சே. இராசன்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... காஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்தித்து உண்மை நிலையை அறியவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு திரும்ப அனுப்பட்டுள்ளது மிக பெரிய ஜனநாயக உரிமை மீறல் என சமம் குடிமக்கள் இயக்கம் கருதுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவித்தது. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அச்சம் கலந்த சூழல் உருவாகியது. மக்களின் வாழ்வும்,சுதந்திரமும் முழுமையாக பாதிக்கப்பட்டது.
இச்சூழலில் காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா, தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதல்- மந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் இன்னும் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், காஷ்மீரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில் , மத்திய அரசு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அறிவித்து வருகிறது  காஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் பார்வையிடவும், அங்குள்ள மக்களை சந்தித்து உண்மை நிலையை அறியவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க் கட்சி பிரதிநிதிகள் 24ஆம்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டனர்.
காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், லோக்தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தேசிய மாநாட்டு கட்சி மஜித் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் தினேஷ் திரிவேதி, ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா ஆகிய 8 கட்சி பிரதிநிதிகள் 11 பேர் இந்த குழுவில் சென்றுள்ளனர்.
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் சென்று இறங்கியதும் அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியே செல்லவும், நகருக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை. எதிர்க் கட்சி தலைவர்களை பத்திரிகை யாளர்கள் சந்திக்கவும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனனர்.
சில மணி நேரம் விமான நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்ட அவர்கள், பின்னர் மாலையில் டெல்லிக்கு விமானத்தில்  திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.இது மக்களாட்சி தத்துவத்தை முழுவதும் முடக்குவதாகும்
எழும் கேள்விகள் ?
அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டது என்றால், ஏன்  அனுமதி மறுக்க வேண்டும்?
இதுதான் பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை நடத்தும் விதமா?இது அரசியல் கட்சிகளின் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகதான் கருத முடியும்..இந்த நிலமை ஜனநாயக நாட்டிற்கு மிகவும் எதிரானது .
ராகுல் காந்தி காஷ்மீர் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியதற்கு, அந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக் காஷ்மீருக்கு வந்து நேரில் நிலைமையை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கட்டும் என சொல்லிவிட்டு  இது போன்று நடந்துக்கொள்வது ஏன்?
இது போன்ற  போக்குகள்  என்பது சர்வதிகார ஆட்சியின் போக்கு.இந்த போக்கு குடியாட்சி தத்துவத்தையும்,சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைத்து விடும்.
ஆளும் கட்சிக்கு இந்த நாட்டை பாதுக்க என்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்பு எதிர்கட்சிகளுக்கும் உள்ளது. எதிர்கட்சிகளின் ஆக்கப்பூர்வ ஜனநாயக பணிகளை ஆளும்கட்சியானது தன்  அதிகாரத்தை கொண்டு தடுப்பது என்பது  சுதந்திர உரிமையை பறிப்பதாகும்.அதனால் உச்சநீதிமன்றமும்,தேசிய மனித உரிமை ஆணையமும் தலையிட்டு உண்மை நிலவரத்தை அறிந்து  நாட்டின் குடிமக்களுக்கு காஷ்மீர் மக்களின் உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த முன்வர வேண்டும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo