Onetamil News Logo

அவசர தேவைகளுக்காக சாலையில் பயணம் செய்பவர்களை லத்தியால் தாக்கினால் அது மனித உரிமை மீறல் .வழக்கறிஞர்.சிசே.இராசன் பேட்டி.

Onetamil News
 

சுகாதரப்பணியாளர்களும்,பரிசோதனை மையங்களும் அதிகரிக்க வேண்டும்.,நாட்டுமக்களுக்கான நலஉதவி திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.,நாட்டைக்காப்போம்-மதுரை மன்றம்., அமைப்பினர் கோரிக்கை ;அவசர தேவைகளுக்காக சாலையில் பயணம் செய்பவர்களை லத்தியால் தாக்கினால் அது மனித உரிமை மீறல் .வழக்கறிஞர்.சிசே.இராசன் பேட்டி.


மதுரை 2020 மார்ச் 27 ;கொரொனா அச்சுறுத்தலானது இந்த உலகையை நிலைகுலைய செய்துள்ளது.நம் இந்தியாவில் 21நாள் ஊரடங்கு  மூலம் மக்கள்வீட்டிற்குள் இருக்கவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அதே நேரத்தில் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட,விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதரத்திற்கும்,பாதுகாப்பிற்கும் சிறப்பு திட்டங்கள் செயல்பாடுகள் தேவை என்கிற குரலும் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது.
இந் நிலையில் மதுரையில் உள்ள சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள நாட்டைக்காப்போம்-மதுரை மன்றம் சார்பில் முனைவர்.தியான்சந்த் கார், வழக்கறிஞர். தமிழரசன், வழக்கறிஞர்.சி.சே.இராசன்,வழக்கறிஞர்.செல்வகோமதி,எவிடன்ஸ் கதிர் ஆகியோர் கூட்டாக  இணைந்து பத்திரிக்கை செய்தி அளித்துள்ளனர்.
அவர்கள் தங்களது  செய்தியில் தமிழகத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவபணியாளர்களும் ,தூய்மை பணியாளர்களும் முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படுகின்றனர்.மக்கள் நலன் சார்ந்த அவர்களது பணியினை நாட்டைக்காப்போம்-மதுரை மன்ற கூட்டமைப்பு பாராட்டுவதாக கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் தங்கள் அறிக்கையில் நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலமாக கொரோனாவை தடுக்க முடியுமா என்கிற செயல் திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.கொரோனா தொற்று  கண்டுப்பிடிப்பிற்கும்,மருத்துவ உதவிக்கும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட வேண்டும்; மற்றும் கொரோனா உதவி எண்கள் மாவட்டம் தோறும் கொடுக்கப்பட்டிருக்கிறது.அது போதுமானதாக இல்லை தாலுகா வாரியாக கொடுக்கப்பட வேண்டும். இந்த பணியில் ஈடுபடுத்த படுகின்ற தூய்மை பணியாளர்கள் தியாக உணர்வோடு தங்கள் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு தரமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசு ஏழை எளிய நடுத்தர மக்கள்,விவசாயக்கூலிகள், தினக்கூலிகள்,தொழிலாளர்கள் ஆகியோரை கணக்கெடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5ஆயிரம் என 3மாதம் வழங்கிட உத்தரவிட வேண்டும்..இந்தியாவில் உள்ள 25 கோடியே 50லட்சம் குடும்ப அட்டை உள்ள ஓவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி அளிக்க இந்திய அரசு உத்தரவிட வேண்டும்.அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு 
குடும்பத்தினருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை 3மாதம் வழங்கிட வேண்டும்.

தினக்கூலிகள்,ஒப்பந்த தொழிலாளர்கள்,குடிசை பகுதி தொழிலாளர்கள்,துப்புரவு  தொழிலாளர்கள்,ஆதிவாசிகள்,
மீனவர்கள்,விவசாயிகள், தலித்துகள், மாற்றுத்திறனாளிகள்,பெண்கள்,
தனித்து வாழும் பெண்கள்,திருநங்கைகள்/திருநம்பிகள் போன்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசானதுஅரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை கடுமையாக முடக்கி வந்தது.இதனால் அரசு சாரா நிறுவனங்கள் பெரும்பாலும் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இந்த நிலையில் மத்திய அரசு அரசு சாரா நிறுவனங்களை முடக்குவதை நிறுத்த வேண்டும்.அவர்கள் பணி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவேண்டும். உறுதுணையாக இருக்க வேண்டும் என தங்களது அறிக்கையில்   கூறியுள்ளனர்.
மேலும் தற்போதைய சூழல் குறித்து நாட்டைக்காப்போம் அமைப்பாளர்களில் ஒருவரான மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் அவர்களிடம் கேட்டப்போது மத்திய மாநில அரசுகளின் உத்தரவுக்கு நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பட வேண்டும்.அதே நேரத்தில் 21நாள் வேலையின்மையால்  வறுமை அதிகரிக்கவும், பசியின் கொடுமையால் மக்கள் பெரும் அளவில்  வாடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.தினக்கூலி தொழிலாளர்கள் இப்போதே பாதிக்கப்படுகின்ற சூழலை பார்க்க முடிகிறது.அதனால் அரசின் நிவாரண உதவிகள் மக்களுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில் அரசு வழி வகை செய்ய வேண்டும்.
தமிழக அரசும்,மத்திய அரசும் வழங்க உள்ள உதவி திட்டங்கள் மக்களை நேரடியாக அவர்களின் வீடுகளில்,கைகளில் சென்று சேரும்படி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கட்டிட வேலை மற்றும் லாரி ஓட்டுனர் மற்றும் கூலி தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல்,உணவும் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது அரசு அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ முன் வர வேண்டும்‌.
கொரோனாவை ஒழிக்க சுகாதர பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதர அமைப்பு சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ள இச்சூழலில் அவசிய தேவைகளுக்கு வெளியை செல்லுவோரை பாதுகாப்புடன் இருக்க காவலர்கள் அறிவுறுத்தவோ,மீறினால் வழக்கு போடவோ அதிகாரம் உள்ளது.லத்தியால் தாக்குவது,தோப்புக்கரணம் போட சொல்வது போன்ற வேவ்வேறு வகையில் தண்டனை தருவது, சித்ரவதைக்குள்ளாக்குவது மனித உரிமை மீறல் ஆகும்.தஞ்சாவூரில் பணிமுடித்து இரு சக்கர வாகனத்தில் வந்த மருத்துவர் கூட லத்தியால் தாக்கப்பட்டுளார்.இது போன்ற செயலை அரசு ஊக்கப்படுத்தாமல் கண்டிக்க வேண்டும்.மக்கள் நல அரசாக நமது அரசு செயல்படவேண்டும் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo