Onetamil News Logo

சித்ரவதைக்கு எதிரான ஐ.நா பிரகடனத்தை இந்திய அரசு உடனடியாக ஏற்புறுதி செய்ய வேண்டும். சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

Onetamil News
 

சித்ரவதைக்கு எதிரான ஐ.நா பிரகடனத்தை இந்திய அரசு உடனடியாக ஏற்புறுதி செய்ய வேண்டும்.
சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கைமதுரை 28 ஜூன் 2019 ;சமம் குடிமக்கள் இயக்கம் சார்பில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா ஆதரவு தினமான சூன் 26 அன்று (UN International Day in Support of Victims of Torture) கருத்தரங்கு மதுரையில் நடைப்பெற்றது.சமம் குடிமக்கள் இக்க மாநில தலைவர் வழக்கறிஞர் சி.சே.இராசன் தலைமை தாங்கினார்.
இக்கருத்தரங்கில் சித்தரவதைக்கு எதிரான பிரகடனம், சித்தரவதைக்கான தனி சட்டத்தின் அவசியம் ,குடும்ப சித்ரவதைகள் , சாதியபாகுபாடுகள் , குழந்தைகள் மீதான சித்தரவதை , காவல் நிலைய சித்தரவதை, சிறுபான்மையின மக்கள்  மீதான சித்தரவதை மற்றும் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு நிகழும்  சித்தரவதைகள்  குறித்து கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன.
சித்தரவதையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் உள்ள அடிதட்டுமக்கள்தான்  அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், தலித்துகள், மத சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களாக உள்ளனர். சித்தரவதையால் பாதிக்கப்பட்டவர்கள்' பயம்' காரணமாக சட்டநடவடிக்கையில் ஈடுபடாமல் மௌனம் காக்கின்றனர். சித்தரவதையில் ஈடுபடுவர்கள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்ளனர். சித்தரவதை என்பது ஒரு சமுக குற்றம். ஆயிரக்கணக்கானோர் மனித தன்மைகளற்ற முறையில் பாகுபாட்டினாலும், காவல் சித்தரவதைகளாலும், போலி மோதல் சாவுகளாலும் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். இச்செயல்கள் யாவும் அடிப்படை மனித உரிமைகளையும், மனித மாண்புகளையும் மீறும் செயல்களாகும் என்ற கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன.
ஐநாவின் சித்திரவதைக்கெதிரான உடன்பாட்டில் (Convention Against Torture—CAT) 1997இல் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.. ஆனால், ஏற்புறுதி (ratify) செய்யவில்லை. ஏற்புறுதி செய்தால் மட்டுமே இந்தியாவில் சித்திரவதையைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றி அமல்படுத்த முடியும். இருப்பினும் 2010இல், சித்திரவதை தடுப்புச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு அது தேர்வுக்குழுவின் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டது. அதற்குப் பின்னர் இத்தனை  ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. சித்திரவதைகள் இல்லாமல்  கண்ணியத்துடன் மனிதனை நடத்தும் மனித உரிமைப்பார்வை காவல் துறையிலும், நீதித் துறையிலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் வளரவேண்டும்.
 உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வதைப்பது அங்கீகரிக்கப்பட்ட கலாச்சாரமாக வளர்வதை
 உணர்ந்துதான்  சர்வதேச சமூகம் சித்திரவதை என்பது மனித மாண்புக்கும் கண்ணியத்துக்கும் எதிரானது என்று வரையறை செய்து ஐநாவில் சித்திரவதைக்கு எதிராக உடன்பாட்டை இயற்றியது.
 சி்த்திரவதைக்கெதிரான உடன்பாட்டை ஏற்புறுதி செய்யாமலிருப்பது அரசு இன்னும் வதையை ஒரு ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தவே பயன்படும். போன்ற  கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;
" இந்திய அரசு உடனடியாக  சித்தரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையினை (CAT) ஏற்புறுதி (ratify)செய்ய வேண்டும்.
 *சித்திரவதைக்கெதிரான சட்டத்தை அமல்படுத்தி.  மனித உரிமைப் பண்பாட்டை வளர்பதோடு சாமானியர்களை  கொடூரமான வதைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
சித்தரவதையால் பாதிக்கப்பட்டவர்களையும் ,சாட்சி அளிப்போரையும் பாதுகாக்கும் வகையில்,  சித்தரவதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும் வகையில் தனிசட்டம் அமைய வேண்டும்
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மேல் கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்.என்கவுண்டர் மற்றும் காவல் நிலைய மரணங்களில் ஈடுப்பட்டு உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.சுற்றுச்சூழல் ஆர்வலர்.முகிலன் காணாமல் போய் மாதங்கள் கடந்தும் அரசு நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது அச்சத்தை உருவாக்குகிறது.அரசு மக்களிடம் அச்ச போக்கை உருவாக்காமல் முகிலனை கண்டுபிடித்து தர வேணாடும்.
குடி மற்றும் போதை பழக்கத்தால்  பெண்கள் மீதான வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அதனால்  பூரண மதுவிலக்கை  தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று காலம் கடந்தும் சிறையில் அடிப்படை உரிமைக்கு எதிராக அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் .
ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிசட்டம் கொண்டுவரப்பட வேண்டும்
தமிழகத்தில் இருந்து அயல்நாடுகளில் சாதரண பணிகளுக்கு செல்பவர்கள் முறையில்லாத ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு அந்நாடுகளில் சித்தரவதைக்குள்ளாகின்றனர்.
அயல் நாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு பணிபாதுகாப்பும், அரசு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பயிற்சியும் வழங்கப்பட  வேண்டும்.
*மதுரை சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் பழங்குடி நாடோடி காட்டு நாயக்கர் சமுகத்தை சார்ந்தவர்களில் சில குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதிற்காக மதவாத சக்திகளின் துணையோடு அக்குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களை சித்தரவதை செய்து வருபவர்கள் மீதும் ,மத வேறுபாடுகளை தூண்டுபவர்கள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுத்து மதநல்லிணகத்தை காப்பாற்ற முன்வர வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மீட்பு அமைப்பை சார்ந்த சோமசுந்தரம்,நுகர்வோர் அமைப்பை சார்ந்த முத்துகிருஷ்ணன்,சமம் குடிமக்கள் இயக்கத்தை சார்ந்த சண்முகவேலு,நாடோடி பழங்குடி மக்கள் இயக்கத்தை சார்ந்த மணி ஆகியோர் கருத்துரை ஆற்றனர்.சமம் குடி மக்கள் இயக்க அமைப்பு செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo