Onetamil News Logo

மதுரை  வக்கீல் நந்தினி ஆனந்தன் EVM மோசடி ;தேர்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டில்  தேர்தல் நடத்த கோரி வரும் 30ம் தேதி உண்ணாவிரத போராட்டம் 

Onetamil News
 

மதுரை  வக்கீல் நந்தினி ஆனந்தன் EVM மோசடி ;தேர்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டில்  தேர்தல் நடத்த கோரி வரும் 30ம் தேதி உண்ணாவிரத போராட்டம் 


மதுரை  2019 மே 28 ;-மதுரை  வக்கீல் நந்தினி ஆனந்தன் EVM மோசடி ;தேர்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டில்  தேர்தல் நடத்த கோரி வரும் 30ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.                                                                                                                                                                                             மதுரை  வக்கீல் நந்தினி ஆனந்தன்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...  EVM மோசடி செய்த  மோடி பதவி ஏற்க தகுதியில்லை. மோசடி தேர்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டில்  தேர்தல் நடத்த கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
 
நாள்: 30.5.2019 ;இடம்: காந்தி மியூசியம் முன்பு, மதுரை 

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற தகுதியை இந்தியா இழந்துவிட்டது.மக்கள் உணர்வுக்கு மாறாக தேர்தல் மோசடிகள் மூலம் மோடி மீண்டும் பிரதமராவது  சர்வாதிகாரத்தின் உச்சம்.

நாடு முழுவதும் தேர்தலில் பல முறைகேடுகள் வெளிப்படையாக நடைபெற்றுள்ளதால் ஒப்புகை சீட்டுகளை 
EVM வாக்குகளோடு ஒப்பிட்டு சர்பார்த்து நாட்டு மக்களுக்கு தன் வெற்றியை நிரூபித்துவிட்டு மோடி 
பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கையைy இவர்கள் நிராகரித்துவிட்டனர்.

மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. நாங்கள் சொல்வது தான் தேர்தல் முடிவு என RSS-BJP மக்கள் மீது சர்வாதிகாரத்தை திணிக்கின்றனர்.
 
நாட்டு மக்களின் உணர்வுக்கு மாறாக மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்பது ஜனநாயகம் அழிந்து நாட்டில்  சர்வாதிகாரம் தொடங்குவதன் அறிகுறி  ஆகும்.

மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்வது என்பது நாட்டுக்காக உயிரையே கொடுத்து போராடிய நம் சுதந்திர  போராட்ட வீரர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

எனவே இதைக் கண்டித்து மே-30 மோடி பதவியேற்கும் நாளன்று மதுரை காந்தி மியூசியம் முன்பாக நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறோம்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்.நாட்டு மக்கள் அனைவரும் இந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக கண்டனம் எழுப்புமாறு அதில் கூறியுள்ளார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo