Onetamil News Logo

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ.பால்துரை மதுரையில் கொரோனாவால் மரணம்

Onetamil News
 

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ.பால்துரை மதுரையில் கொரோனாவால் மரணம்


மதுரை 2020 ஆகஸ்ட் 9 ;  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பால்துறை (56) உயிரிழந்தார். சர்க்கரை நோய் காரணமாக ஜூலை 7ல் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில்,``என் கணவர் உயிருக்கு ஆபத்து, அவரை காப்பற்றுங்கள்’’ என்று பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் புகார் எழுப்பி இருந்தார்.
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் எஸ்.எஸ்.ஐ-யான பால்துரையும் ஒருவர். மதுரை சிறையில் இருக்கும் பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டார்.
இந்தநிலையில்தான் தன் பால்துரையின் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். ``என் கணவர் தட்டார்மடத்திலிருந்து சாத்தான்குளத்துக்கு ஒரு வாரம் மட்டும் மாற்றப்பட்டார். அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாத்தான்குளம் வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத என் கணவரை பழி வாங்குகிறார்கள். தற்போது, அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
நல்ல சிகிச்சை இல்லாமல் கை, கால் இயங்க முடியாத நிலையில் உள்ளார். கட்டுப்பாட்டிலிருந்த சர்க்கரை அளவு சிறைக்குச் சென்றபின் அளவுக்கதிகமாகி உள்ளது. இதய நோயும் உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சரியான கவனிப்போ, சிகிச்சையோ இல்லை. அவருக்கு தண்ணீர் கொடுக்கக் கூட எங்களை விட மறுக்கிறார்கள்.எங்கள் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அதனால், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் உயிருக்கு எதாவது ஆகிவிடும்'' என்று ஏற்க்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த கோரிக்கையுடன் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக மங்கையர் திலகம் கூறினார். மேலும் அவர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் சாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo