Onetamil News Logo

 ரூ50 லட்சம் மதிப்புள்ள 9.51 சென்ட் நிலத்தை  மோசடி செய்து கிரையம் எழுதிக் கொடுத்தவர் கைது 

Onetamil News
 

 ரூ50 லட்சம் மதிப்புள்ள 9.51 சென்ட் நிலத்தை  மோசடி செய்து கிரையம் எழுதிக் கொடுத்தவர் கைது 


தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி கிராம சர்வே எண் 54-ல் 1 ஏக்கர் 70 சென்ட், சர்வே எண்: 55/1ல் 1 ஏக்கர் 64 சென்ட், சர்வே எண்: 55/2ல் 21 சென்ட் ஆக மொத்தம் 3 ஏக்கர் 55 சென்ட் நிலத்தை பிளாட்டுகளாக பிரித்ததில் பிளாட் எண் 14-ல் 9.51 சென்ட் நிலத்தை 1979ம் ஆண்டு அகஸ்டின் என்பவரிடமிருந்து தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் சீராளன் என்பவர் கிரையம் பெற்றுள்ளார். மேற்படி சீராளன் 1984ம் ஆண்டு மாசானமுத்து என்பவருக்கு மேற்படி சொத்தை கிரையம் கொடுத்துள்ளார். மாசானமுத்து மேற்படி சொத்தை 1985ம் ஆண்டு கௌரி என்பவருக்கு கிரையம் கொடுத்துள்ளார். கௌரியிடமிருந்து மேற்படி 9.51 சென்ட் நிலத்தை கிரைய ஆவண எண்: 1048/1987ன் படி 1987ம் ஆண்டு தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சங்கரநாராயணன் என்பவர் கிரையம் பெற்றுள்ளார்.
    சங்கரநாராயணன் மேற்படி சொத்துக்கு பட்டா பெறாமல் இருந்த நிலையில், பட்டாவில் முன்னாள் உரிமையாளரான சீராளன் பெயரில் இருந்து வந்ததை பயன்படுத்தி சீராளன் மனைவி சமுத்திரவள்ளி, மகள்கள் ஜெயசுதா, காயத்ரி மற்றும் மகன் ராம்மனோகர் ஆகியோர்கள் மற்றும் சிலருடன் கூட்டு சேர்ந்து மேற்படி சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மேற்படி சொத்து சீராளன் என்பவருக்கு பூர்வீகமாக பட்டா எண்: 551 மூலம் பாத்தியப்பட்டது என்றும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டதை மறைத்தும் சீராளனின் மனைவி சமுத்திரவள்ளி, மகன் ராம்மனோகர் ஆகியோரின் பெயரில் இரண்டு மோசடியான பாகவிடுதலை ஆவணங்களை உருவாக்கி அதை உண்மையானது போல் பயன்படுத்தி மேற்படி சொத்தில் 5.32 சென்ட் நிலத்தை டூவிபுரம் பகுதியை சேர்ந்த தாளமுத்து என்பவருக்கு 2021ம் ஆண்டு கிரையம் கொடுத்தும், மீதமுள்ள 3.91 சென்ட் நிலத்தை முள்ளக்காட்டை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்தும் சங்கரநாராயணனின் சொத்தை மோசடியாக அபகரித்துள்ளனர்.
                      இதுகுறித்து மேற்படி சங்கரநாரயணன் தனது நிலத்தை சமுத்திரவள்ளி, ராம்மனோகர், ஜெயசுதா, காயத்ரி, சிவக்குமார், தாளமுத்து ஆகியோர் கூட்டுசதி செய்து அபகரித்துள்ளதாக அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் உதவி ஆய்வாளர் காமராஜ், தலைமைக் காவலர் அருணாச்சலம், முதல் நிலை காவலர்கள் சித்திரைவேல், பன்னீர்வேல்செல்வம் ஆகியோர் மேற்படி சொத்தை மோசடி செய்த எதிரியான ராம்மனோகரை (24) கைது செய்தனர்.  மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo