Onetamil News Logo

தவறாக பேசி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 

Onetamil News
 

தவறாக பேசி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 13 ;தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல் நிலையம் பகுதியில் தவறாக பேசி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் நேற்று (12.10.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம், வஉசி நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் லிங்கம் (27) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி லிங்கம் என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo