Onetamil News Logo

சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக  வைத்திருந்தவர் கைது - 3 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல்

Onetamil News
 

சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக  வைத்திருந்தவர் கைது - 3 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல்


தூத்துக்குடி 2021 செப் 16 ;தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக  வைத்திருந்தவர் கைது - 3 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர்  சிவராஜா, முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில், திருமணி, வள்ளிநாயகம் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (15.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது  தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியில்,  தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன் மகன் பாலமுருகன் (29) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சாவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் பாலமுருகனை கைது செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய  ஆய்வாளர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாலமுருகனிடம் இருந்த 3 கிலோ 400 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo