Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ;   தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடந்தது. 
இந்த  பிறந்த தினநாளில் நண்பர்கள் சூழ வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.விழாவில் 100க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு சேலைகளை தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் பண்பாடு மேம்பட்டு மையம் செயலாளர் திருமணிராஜா செய்திருந்தார். இந்து முன்னணி சார்பாக இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் கே எஸ் ராகவேந்திரா ஆட்டோ முன்னணி தூத்துக்குடி பொறுப்பாளர் எஸ்பி சிவலிங்கம் கலந்துகொண்டு ஐயா அவர்களுக்கு பொன்னாடை போற்றி ஆசி பெற்றனர்.தமிழக வேளாளர் மற்றும் வெள்ளாளர் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஓம் சக்தி சங்கர் ,தமிழ் பண்பாடு மேம்பட்டு மையம் தலைவரும், பத்திரிகையாளருமான ஜெகஜீவன் ,குமார்.சரவணன்,நண்பர்கள்,வழக்கறிஞர்கள் ,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் அவரை நேரில்,போனில்,தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.   
யார்? இந்த எம்.ஆர் என்ற மங்களராஜ் இவர் படிக்கும் போது விளையாட்டியிலும்,படிப்பிலும் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்றார்.
அதுபோல இவர் அடாவடித்தனத்திலும்  பல்கலைக்கழக அளவில் நம்பர் ஒன் -கவே இருந்துள்ளார். காமராஜ் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முதல் சுப்பையா ,பாக்கியம் பிள்ளை,பல்கலைக்கழக துணை வேந்தர் சிட்டி பாபு வரை அனைவரும் அறியப்பட்ட ஒரு எளிமையான விரல் விட்டு  எண்ணக்கூடிய மிகவும் போற்றக்கூடிய முக்கியமான வி.வி.ஐ .பிகளில் ஒருவர் தான். தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்களராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் தொழிலதிபர் மங்களவேல் என்ற மங்களராஜ் இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்டதற்கு அவர் நம்மிடையே கூறியதாவது....எனது பேராசிரியரும்,கல்லூரி முதல்வருமான     எல்லோருக்கும் பள்ளிக்காலத்திலும், கல்லூரி காலத்திலும் தங்களுக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று சிலர் இருப்பார்கள்.
அந்த வகையில் எனக்கும் என்னுடைய கல்லூரி காலத்தில் கல்லூரி முதல்வரும், பேராசிரியருமான செல்வராஜ்  மிகவும் பிடித்தமான ஒரு பேராசிரியர். இன்றைக்கும் நினைவில் இருந்து நீங்காத ஒரு பேராசிரியரும் கூட. மிகவும் கடினமான பாடங்களைக்கூட அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக அவர் வகுப்பு எடுக்கிற விதமே தனி அழகு தான். எனக்குத் தெரிந்து  அவர் யாரையும் மிகவும் கோபமாக திட்டியது கூட கிடையாது. அந்த அளவிற்கு அவர் எல்லாவற்றையும் எங்களின் அடாவடியாக இருந்த அனைத்தையும் சுலபமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக எங்களுக்கு புரிகிற மாதிரி அறிவுரை வழங்குவார். எங்களிடம் ஒரு ஆசிரியர் போல் பழகாமல், ஒரு தோழனைப் போல் பழகுவது தான் அவருடைய தனிச் சிறப்பு. 
அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த இரண்டு விஷயங்களே போதுமானது அவர் எப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்கு.அவர் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் அவரால் உருவாக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் .,அதிகாரிகள் ஏராளம்,அவரால் அடையாளம் காணப்பட்டவரில் நானும்,ஒருவர்,அய்யாவுடன் இருந்த காலங்கள் அனைத்தும்,வசந்த காலங்கள்..
இப்படி ஒரு முதல்வரை நாங்கள் பார்க்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு முகவரியே இல்லாமல் போய் இருக்கும்,அந்தக்காலத்தில் 1976 -1979 காலகட்டங்களில் மாணவர் செயலர் என்கின்ற முறையிலே அடாவடியாக இருந்த எங்களை மனிதனாக மாற்றிய மாமனிதன் அவர். வசதியில்லாத மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கட்டி படிக்க வைத்தவர்.உலகத்திலேயே மாணவர்களை பிள்ளைகளாக கருதியவர் இவர் ஒருவரே.அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் அனைத்தையும் விட சிறந்த மாணவர்களில் எடுத்துக்காட்டாக விளங்கியவர் மங்கலவேல் என்ற மங்கலராஜ்,.குறிப்பிட்டு காட்டத் தகுதி உள்ள ஒரு சிலரில் இவர் மட்டும் மிகவும் முக்கியமானவர்.மாணவரணி செயலர் ,அண்ணாச்சி மட்டும் தான்.... எல்லாரும் பள்ளி,கல்லூரிக்கு சென்று சுய லாபத்திற்கு அழைத்த காலகட்டத்தில் தனக்கு படித்து கொடுத்த ஆசிரியர்களை அடிக்கடி சந்தித்து அவர்களுக்கு ஒரு பிள்ளையாகவே நடந்து வந்துள்ளார்.இந்த மாவட்டத்திலே உள்ள வி.ஐ .பைகளில் இவர் ஒருவரே...இதற்க்கு எடுத்துக்காட்டு தன் ,தந்தை,சொத்தை வைத்து பணத்தை வைத்து,வாழ்ந்துவிட்டு அவர்களை அனாதை இல்லத்தில்,அல்லது முதியோர் இல்லத்தில் கொண்டு விடும்,மானக்கெட்ட மனிதர்கள் வாழும்,இந்த சமுதாயத்தில் தன் தாய்,தந்தையைப்போல் தன் கல்லூரி முதல்வர் செல்வராஜ் -கல்யாணி அம்மாள் அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவான முத்துவிழாவுக்கு ஏற்பாடு செய்தார்.அவர்களுக்கு பட்டு வேஷ்டி,சட்டை,பட்டுசேலை அணிவித்து அழகு பார்த்தார்.இப்படிப்பட்ட இந்த மனிதநேயம்மிக்க பிரபல தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் அவர்களை இந்த ஆசிரியர் தினத்தில் அல்ல ஆசிரியர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.எப்படியும் வாழலாம் என வாழும் காலகட்டத்தில் இப்படியும் பழைய மாணவரான எம்.ஆர்.அவர்களை, எல்லோராலும் பாராட்ட கூடிய இடத்தில் இருப்பதால் அவரை பாராட்டியே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்...வாழ்க பல்லாண்டு............... வேண்டும் அன்புடன் ஆசிரியர் செ,ஜெகஜீவன்.....
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo