திமுக வரலாறு தெரியாமல் பலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் அதை முறியடிக்க வேண்டும் தூத்துக்குடி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் தலைவர் உத்தரவிற்கிணங்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதிக்கு 50 ஆயிரம் வீதம் 3 தொகுதிக்கும் 1.5 லட்சம் புதிய உறுப்பினர்கள் ஜீன் 3ம் தேதிக்குள் சேர்க்க வேண்டும். இதை முகாமாக நடத்தி அதில் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் என அனைத்து அணியினரும் உள்ளடக்கி செய்ய வேண்டும். கலைஞர் 14வயதில் கொடிபிடித்து தமிழை வளர்த்து பெரியாரின் வழியில் அண்ணாவின் தம்பியாக கொள்கையோடு தமிழக முதலமைச்சராக பணியாற்றிய கலைஞர் தேசிய அரசியலிலும் பல பிரதமர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கும் வகையில் பணியாற்றியவர் அவரது நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக பெரியார் அண்ணா திட்டத்தையெல்லாம் சட்டமாக்கியவர் கலைஞர் அதனடிப்படையில் தான் 96ம் ஆண்டு இடஓதுக்கீட்டின் படி நான் அரசியலுக்கு வந்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றினேன். ஓய்வின்றி உழைக்கும் முதல்வருக்கு நாம் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி எம்பி தேர்தலில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் அதுதான் நம்முடைய இலக்கு. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் பொய் பிரச்சாரம் செய்வதை முறியடிக்க வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்தி வருவதையும் தடுக்க வேண்டும். ஜாதி உணர்வு மதவெறி இதையெல்லாம் கூறி பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கு இடம் தரகூடாது. குழப்பமான கருத்தை சொல்லி சிலர் குழப்பி வருகின்றனர். நம்மை பொறுத்தவரையில் எல்லா மதத்தையும் மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம். திமுகவின் வரலாறு தெரியாமல் பலர் பேசி வருகின்றனர். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் முதலமைச்சரின் திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைய பெற்றுள்ளது. எம்.பியும் நம்முடைய குரலாக இருந்து தொகுதிக்காக நல்லமுறையில் பணியாற்றி வருகின்றார். 40க்கு 40 தொகுதியும் வென்றெடுக்க வேண்டும். என்று பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்றால் தளபதியின் உழைப்பும் தொலைநோக்கு பார்வைதான் காரணம் கூட்டணியை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் அதை தலைவர் பார்த்துக்கொள்வார். நாம் செய்ய வேண்டிய பணி அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெறுவது மட்டும் தான் நமது இலக்காக இருக்க வேண்டும். நமது கட்சியையும் தலைவரையும் விமர்சனம் செய்து பல்வேறு இனையதளங்கள் வாட்சப் போன்றவைகளில் வெளியிடுபவர்களுக்கு அது எந்த கட்சியாக இருந்தாலும் உடனே பதிலடி கொடுக்க வேண்டும். நாம் யாருக்கும் அடிமை கிடையாது. அடி பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார்.
மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் அன்பால் பவர்புல் அமைச்சராக கீதாஜீவன் இருந்து வருகிறார். தலைமை கழகம் உத்தரவுகளை உடனடியாக நடைமுறை படுத்துவது நல்ல சிந்தனையுடன் விவேகத்துடன் பணியாற்றுவது மற்ற மாவட்ட செயலாளர்களை காட்டிலும் முதலமைச்சர் கூறியது போல் பெண்சிங்கம் பணி சிறப்பாக உள்ளது. ஜீன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகம் சார்பில் தலைநகரில் கொண்டாடுவதை விளாத்திகுளத்தில் கொண்டாடுவதற்கு அமைச்சர் அனுமதி தரவேண்டும். அனைவரும் உண்மையாக உழைத்தால் அங்கீகாரமும் பதவியும் தேடி வரும் கடந்த தேர்தலில் உள்ள வாக்கு வித்யாசத்தை விட வரும் எம்.பி தேர்தலில் அதிகமாக பெற்றுத்தருவோம் என்றார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெருமாள் பேசுகையில் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி கட்சியை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த காலத்தில் கட்டுப்பாட்டோடு வைத்து பணியாற்றினார். அவரது வழியில் வந்த அமைச்சர் தற்போது ரானுவத்தை போல் கட்டுப்பாடோடு கட்சியை வழிநடத்தி வருகிறார். என்று பேசினார்.
3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெருமாள் வேல்சாமி, ஜோசப் ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ் மோகன் செல்வின், அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்; தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கஸ்தூரி தங்கம், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ், உமாதேவி, மோகன்தாஸ், அபிராமி நாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், நலம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னப்பாண்டியன், நவநீத கண்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, அன்புராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், சக்திவேல், செல்வகுமார், செந்தில்குமார், இசக்கிராஜா, நாராயணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஆனந்தகபரியேல்ராஜ், அருண்குமார், பிரபு,துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மற்றும் ரவி, சூர்யா, அல்பட், மணி, உலகநாதன், வன்னியராஜ், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.