மாப்பிள்ளையூரணி சந்தனமாரியம்மன் கோவில் திருவிளக்குபூஜை சண்முகையா எம்.எல்.ஏ,ஊராட்சித் தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதாநகரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக சண்முகையா எம்.எல்.ஏ சேலை வழங்கினார்.
விழாவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய திமுக துணைச்செயலாளர் ராமசந்திரன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா, இளைஞர் அணி ராஜேந்திரன், கப்பிக்குளம் பாபு, கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முருகேசன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் வைகுண்டராஜா, உதவி தர்மகர்த்தா மாரியப்பன், துணைச்செயலாளர் உலகநாதன், துணை பொருளாளர் கண்ணன், கணக்கர்கள் முத்துபாலகிருஷ்ணன், மணி ஆகியோர் செய்திருந்தனர்.