Onetamil News Logo

பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் ரூ.7 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினார் ;மாரி செல்வராஜ் வாழ்க்கை வரலாறு 

Onetamil News
 

பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் ரூ.7 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினார் ;மாரி செல்வராஜ் வாழ்க்கை வரலாறு 


தூத்துக்குடி 2020 மே 9 ;புளியங்குளம்,கருங்குளம்,கிளாக்குளம் போன்ற ஊர் மக்களுக்கு பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் ரூ.7 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு அருகில் உள்ள புளியங்குளம் கிராமம்தான்  பரியேறும் பெருமாள்’ திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த ஊர். இவர் சாதி ஏற்றத்தாழ்வுடன், அவரது புளியங்குளம் மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து  பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி வெற்றியும் கண்டார். அனைவரது  கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று, தன் முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்றார். மீண்டும் அவரது இயக்கத்தில், நெல்லை மாவட்டத்தில் நடந்த மற்று மொரு சமூகப் பிரச்னையை மையமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் `கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா  ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புளியங்குளம் மக்களுக்கு 2000 குடும்பங்களுக்கு, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் என, ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அவரே வீடு வீடாகச் சென்று அவரே வழங்கியுள்ளார்.
இதுகுறித்து புளியங்குளம் காசி முருகன் கூறியதாவது....மாரி செல்வராஜ் அண்ணணுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். மாரி அண்ணண்  குடும்பத்தில் அவருக்கு அப்பா, அம்மா., அண்ணண் 2 பேர்,அக்கா 1 , இவர்கள் அனைவரும் திருமணம் செய்து அரசுப்பணிகளில் பணி செய்கின்றனர். அவரது இரண்டு பேரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பஞ்சம் ஏற்பட்டு விவசாய வேலைகளும் இல்லாததால், உள்ளூர் ஆண்கள் அரிதாரம் பூசி பெண் வேடமிட்டு ஆடும் சம்படி ஆட்டம் குழுவில் மாரியின் அப்பா செல்வராஜ், ஆடிப் பாடிய பாடல்களை மாரியும் சின்ன வயசுல பாடி ஆடுவார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, சட்டக்கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சென்னைக்கு சென்றார்.
சென்னை ஜவுளிக்கடையிலும் பணி செய்துள்ளார். சென்னை பெட்ரோல் பங்கில் இரவு காவலராகவும்  பணி செய்துள்ளார்அதன் பிறகு இயக்குநர் ராம்-யிடம்  சேர்ந்து, 10 வருடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் `கற்றது தமிழ்’, `தங்க மீன்கள்’, `தரமணி’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணி செய்துள்ளார்.
அதன் பின்னர் அவரே திரைப்படம் இயக்க முடிவு செய்து `பரியேறும் பெருமாள்’ கதையைத் தயார் செய்து திரைப்படம் முழுவதும் எங்கள் ஊர்,அருகில் உள்ள ஊர் போன்ற இடங்களில் தான் அவற்றை ஒளிப்பதிவு செய்து இயக்கினார். புளியங்குளம் ஊருக்கு வரும்போதெல்லாம் மக்கள் அனைவரையும்  அன்பொழுக விசாரித்து உதவுவார்.அவர் வெற்றி இயக்குனரான கெத்து அவரிடம் இல்லை,அவரது எளிமை எல்லோரிக்கும் பிடித்துவிட்டது.
கொரோனா பிடியில் வேலையில்லை எங்கள் வீட்டுக்கு 20 கிலோ 2 அரிசி பை வழங்கினார்.இது போல் ஒவ்வொரு வீட்டுக்கும் 10 கிலோ அரிசி, மளிகைப்பொருள்கள் தொகுப்புப் பையை அவரே வீடு வீடா வந்து கதவைத் தட்டி கொடுத்துட்டுப் போனார். சினிமாவுல சின்ன ரோல் கிடைச்சு நாலஞ்சு படத்துல தலைகாட்டிட்டா, சொந்த ஊரை மறந்து விடுவார்கள்.ஆனால் இவர் அப்படி இல்லை....
இந்த நிலையில், கொரோனா  ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புளியங்குளம் மக்களுக்கு 2000 குடும்பங்களுக்கு, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் என, ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அவரே வீடு வீடாகச் சென்று அவரே வழங்கியுள்ளார்.மேலும் புளியங்குளம், கருங்குளம், கிளாக்குளம் உட்பட மூன்று ஊர்களுக்கும் மொத்தம் 2000 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினார். விதவை,மாற்றுத்திறனாளிகள்,ஆதரவற்றோர் உட்பட 100 பேருக்கு ரூ 2000 வழங்கியுள்ளார். எல்லா வீட்டுக்கும் நிவாரணப் பொருள்கள் கொடுத்து உதவி செய்யுறதுக்குத் தனி மனசு வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது. இன்று சினிமாவில முன்னேறுவதற்கு ஊக்கம் கொடுத்ததே எனது கிராம மக்கள் தான். அவர்கள் இந்த கொரோனா பிடியில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்ததில் எனக்கு பெருமையாக  நினைக்கிறேன்.என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo