டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை,அரசு உதவி பெறும் பள்ளி கணித ஆசிரியை கைது
டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை,அரசு உதவி பெறும் பள்ளி கணித ஆசிரியை கைது
திருச்சி 2023 மே 3 ;திருச்சி அருகே டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியை போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி பகுதியில் தேவி வயது 40 துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சத்திரப்பட்டியில் தங்கி பள்ளி மாணவருக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரிடம் டியூஷன் எடுக்க வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதை அறிந்த மாணவனின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழு மற்றும் மகளிர் போலீசார்ம் விசாரித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் தேவியை நேற்று கைது செய்திருக்கிறார்கள்.