உடல் நலம் குன்றிய தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகி பெருமாளை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி 2023 செப் 16 ;தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி சிகிக்சை பெற்றுவரும், தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகி பெருமாளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தீயணைப்பு துறையினரின் மூலம் வடகிழக்கு பருவமழை காலங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி அவர்கள்; அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஆதி திராவிட நல அணி மாவட்ட தலைவர் சி. பெருமாள் என்பவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் பெருமாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் குறித்து கேட்டறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி தலைவர் பெருமாளுக்கு நல்ல முறையில் சிறப்பான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை தலைவர்கள் மற்றும் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ துறை பேராசிரியர்கள்,மருத்துவர்கள் மற்றும் ஜாஸ்பர் ஆகியோர் உடன் இருந்தனர்.