அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு மடல்
அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு மடல்
தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் 2008ல் உயர்த்தப்பட்ட பிறகு 5 ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டு தற்போது 60 வார்டுகள் உள்ளடக்கிய மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அப்போது இருந்த மக்கள் ஜனத்தொகையை காட்டிலும் தற்போது சுமார் 6 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை இருந்து வரும் சூழ்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிதண்ணீர் சீராக வழங்கப்பட்டு வந்தது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 31 குடிதண்ணீர் தொட்டிகள் உள்ளன. அவற்றிற்கு தாமிரபரணி கலியாவூர் பகுதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிதண்ணீர் குழாய்கள் மூலம் வரபெற்று நீர்த்தேக்க தொட்டிகளில் நீரறேற்றம் செய்து 60 வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சூழற்சி முறையில் குடிதண்ணீர் வரும் நேரம் மாநகராட்சி சார்பிலும் அந்த பகுதி மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு பாரபட்சமின்றி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வழக்கமான மழையின் அளவு சற்றுக்குறைந்ததால் மாநகர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த பாபநாசம் அணையில் நீர்நிலை மிகவும் குறைந்தது. இதனை சரிசெய்யும் வகையில் பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மாநகராட்சி சார்பில் அதன்பின் தாமிரபரணி நீர்வரத்து பகுதி மற்றும் கலியாவூர் நீரேற்ற பகுதியில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதியுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் வரத்து பகுதியில் தண்ணீரை உறிஞ்சும் அமல செடிகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள நீர்வரத்து தடங்களை எல்லாம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி மடலில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 5 தினங்களாக இருந்து வந்த தண்ணீர் தட்டுபாடு தீர்ந்தது விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டுவிட்டது. இனி வரும் காலங்களில் வழக்கம் போல் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் இதுவரை குடிதண்ணீர் தொடர்பாக ஏற்பட்ட சீரமங்களை பொறுத்துக்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.