Onetamil News Logo

செம்பருத்திப்பூ  இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அருமையான எளிய மருந்து 

Onetamil News
 

செம்பருத்திப்பூ  இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அருமையான எளிய மருந்து   


 தூத்துக்குடி 2019 ஏப்ரல் 23 ;செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். 
 
உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும்  பாதிப்புகளும் அற்றது
 
செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மாதவிடாயைத் தூண்டக் கூடியது.  இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
 
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப்படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
 
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக்  கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி  சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.  இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.                                                                                                                                                                             
செம்பருத்தி... இதை செவ்வரத்தை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இது இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதன் தாயகம் கிழக்கு ஆசியா; மலேசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. அதனாலோ என்னவோ சீனா, இது எங்களுக்குச் சொந்தமானது என்று கூறுகிறது. இதுஒருபுறமிருக்க, செம்பருத்தி என்பது வேறு, செம்பரத்தை என்பது வேறு என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரியாது. செம்பருத்தி என்பது பருத்தியில் ஒருவகை. அது இப்போது அழிந்து போய் விட்டது. செம்பரத்தை என்பதே இன்றைக்கு செம்பருத்தி என அழைக்கப்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக்குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.
மிக முக்கியமாக இதயநோய்க்கு செம்பருத்திப்பூ நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதய நோய் குணமாகும். வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள், செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம். 
4-5 செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் விதை நீக்கப்பட்ட ஒரு நெல்லிக்காய், இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சிறிது சேர்த்து மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். 
செம்பருத்திப்பூவை மணப்பாகு செய்து சாப்பிடலாம். இதன்  இதழ்களுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வெயிலில் காய வைக்க வேண்டும். மாலையில் எடுத்து நன்றாகப்பிசைந்து மறுநாள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் பிசைந்து சாறு பிழிய வேண்டும். அதை அடுப்பில் வைத்து நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இதை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீர் சேர்த்துக் குடிக்கலாம்.
செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது. 
இவை தவிர உஷ்ணம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு அமைதியையும் தரக்கூடியது செம்பருத்தி.
செம்பருத்திப் பூ ;
மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகளும் சரியாகும்.
உரிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு செம்பருத்திப்பூக்களை நெய்யில் வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வந்தால் உரிய பலன் கிடைக்கும். 
செம்பருத்திப்பூக்களை சிகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். 
சிலர் காயவைத்த செம்பருத்திப்பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக்கொள்ளலாம்.
நரைமுடி, பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் தீர செம்பருத்திப்பூக்களுடன் இதன் இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை போன்றவற்றைச்சேர்த்து மையாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்து வந்தால் நாளடைவில் பிரச்னைகள் தீரும். இது கண், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சூட்டினால் வரக்கூடிய நோய்களில் இருந்தும் காத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கு தலைமுடி பிரச்னை பெரும்பிரச்னை. முடி அதிகம் வளர வேண்டுமென்றால் இது கைகொடுக்கும். ஆனால் முடி அதிகம் வளர்ந்து சிலருக்கு ஈறும், பேனும் வந்து மிகுந்த அவதிக்குள்ளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் செம்பருத்திப்பூக்களைப் பறித்து இரவில் தலையில் சூடிக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விட வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் பேன்கள் ஒழிவதோடு, பொடுகுத்தொல்லையும் நீங்கிவிடும்.
இதன் இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.
2 அல்லது 3 செம்பருத்திப்பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வு அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குவதால் வயிற்றிலும், வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.                                                                                                                                                                                                                                                       செம்பருத்தி பூவில் பலவித நன்மைகள் இருக்கின்றன. இப்பொழுது நாம் செம்பருத்தி பூவில் உள்ள நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.
கருமையான கூந்தலுக்கு செம்பருத்தி பூ:
தேவையானப் பொருட்கள்:                                                                                                 செம்பருத்தி பூ
தேங்காய் எண்ணெய்
செய்முறை:
செம்பருத்தி பூவை நன்கு அரைத்து அதனுடைய சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். இதனை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை தினமும் காலையில் தலைக்கு தேய்த்து வந்தால் போதும் முடி நன்கு கருமையாக மற்றும் அடர்த்தியாக  வளரும்.
சிறுநீரகப் பிரச்சணைக்கு செம்பருத்தி பூ:
தேவையானப் பொருட்கள்: செம்பருத்தி பூ (அல்லது) செம்பருத்தி மொட்டு
தண்ணீர்
கற்கண்டு
செய்முறை:
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது அதிக அளவு எரிச்சல் உண்டாகும். இதற்கு நான்கு செம்பருத்தி இலைகளை இரண்டு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி  அதனை வடிகட்டி இனிப்பிற்காக கற்கண்டு கலந்து குடித்தால் குணமாகும்.
(அல்லது)
நான்கு செம்பருத்தி மொட்டுக்களை இரண்டு டம்ளர் நீரில் காய்ச்சி அதனுடன் கற்கண்டு கலந்து குடிக்கலாம்.
இருமல் பிரச்சனை குணமாக செம்பருத்தி பூ:                                                         தேவையானப் பொருட்கள்: 
செம்பருத்தி பூ இதழ் – 15
ஆடாதோடா தளிர் இலை – 3
தேன் – அரை ஸ்பூன்
தண்ணீர்
செய்முறை:
இரண்டு இலைகளையும் நன்கு நசுக்கி இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். இதனை வடிகட்டி அரை ஸ்பூன் அளவு தேன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை என மூன்று நாட்கள் தொடர்ந்துக் குடித்தால் இருமல் முற்றிலும் குணமாகும்.
இதய பிரச்சனை குணமாக செம்பருத்தி பூ:
தேவையானப் பொருட்கள்: செம்பருத்தி பூ, பால் ;  செய்முறை:
செம்பருத்தி பூவை நன்கு காய வைத்து பொடியாக்கி அதனை பாலில் கலந்து காலை மாலை நேரங்களில் குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.                                                           
 ரசாயன உரம் கலக்காத பூக்களே நல்லது, மகரந்தங்களை உதிர்த்து விட்டு, பூவிதழ்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் மற்றும் ஏதாவது அலர்ஜி இருந்தால், முதலில் குறைவான அளவிலேயே உண்ண வேண்டும்.
'சாப்பிடக்கூடிய பூக்கள் எங்கே கிடைக்கும்?' என்று கேட்கிறீர்களா? பெரும்பாலும் அவை நமக்குத் தெரிந்த பூக்கள் தான். அத்தகைய சில பூக்களும் அவற்றின் பலன்களும் இதோ... குறிப்பாக இந்த பூக்களையெல்லாம் டீ வடிவில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்த வழி. மேலும் இத்தகைய பூக்களைக் கொண்டு பெரும்பாலும் சீனாவில் உள்ள மக்கள் தான் டீ போட்டு குடிப்பார்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் வலிமையுடன் இருக்கின்றனர்.                                                                                                                                                                                                                                                            
சீமைச்சாமந்தி சீமைச்சாமந்தியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலின் உட்பகுதியில் உள்ள காயங்களை ஆற்றலாம். செம்பருத்தி செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க வல்லது. லாவெண்டர் லாவெண்டர் பூவை ஐஸ் க்ரீம்மில் சேர்த்தோ அல்லது டீ போட்டு சாப்பிட்டு வந்தால், இது உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும். மேலும் பொடுகுகளை நீக்க வல்லது. பியோனி எனப்படும் வெண்சிவப்பு செடிவகை பூ (Peony) மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர், இந்த பூவை உட்கொண்டால், நல்ல மனநிலையைப் பெறலாம். மல்லிகை பெண்களுக்கு பிடித்த மல்லிகைப்பூ சில வைரஸ் நோய்களுக்கு எதிரானது. இத்தகைய மல்லிகைப்பூவை க்ரீன் டீயில் சேர்த்தோ அல்லது சாலட்டுகளில் தூவியோ எடுத்துக் கொள்ளலாம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo