Onetamil News Logo

1993ம் ஆண்டு +2 படித்து முடித்த தூத்துக்குடி துறைமுக பள்ளி மாணவர்கள் 29 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு

Onetamil News
 

1993ம் ஆண்டு +2 படித்து முடித்த தூத்துக்குடி துறைமுக பள்ளி மாணவர்கள் 29 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு


தூத்துக்குடி துறைமுக பள்ளியில் 1993ம் ஆண்டு படித்து முடித்த பழைய மாணவர்கள் 29 ஆண்டுகளுக்கு பின்பு குடும்பத்துடன் சந்திக்கும் நிகழ்ச்சி துறைமுக சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.
            விழாவிற்கு வந்த பழைய மாணவர்கள் குடும்பத்தினர் பழைய மாணவர்கள் ஜார்ஜ், பவுலினா ஆகியோர் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கலந்து கொண்ட பழைய மாணவர்கள் குடும்பத்துடன் தான் பணியாற்றும் தொழில் மற்றும் குழந்தைகள் பற்றிய சுய குறிப்புகளை தெரிவித்தனர். ஒவ்வொரு பழைய மாணவர்கள் குடும்பத்திற்கும் மற்றொரு மாணவர்கள் குடும்பத்தினர் பரிசுகளை வழங்கி கடந்த கால பள்ளி பருவ படிப்பு முதல் தற்போது உள்ள தொழில்கள் வரை பரிமாறிக்கொண்டு தங்களது மகிழ்ச்சிகளை தெரிவித்துக்கொண்டனர். இதில் கலந்து கொள்ள முடியாமல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார்கள் பின்னர் அனைவருக்கும் விருந்து நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் ஆறுமுகம்,ஜெபராஜ், பச்சைபெருமாள், கபில், யூசுப் சந்திரா, ஆத்திக்கண்ணன், வடிவு, பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். 50 பழைய மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo