விளாத்திகுளம் உட்கோட்டத்தில் மெகா பெட்டிசன் மேளா ;விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் 33 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு
விளாத்திகுளம் 2021 ஜனவரி 17 ; விளாத்திகுளம் உட்கோட்டத்தில் மெகா பெட்டிசன் மேளா ;விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் 33 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ,விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இன்று MASS GRIVENCE REDRESSAL (MGR). தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படியும் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையிலும் விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் நிலுவையில் இருந்த மனுக்கள் மீதான விசாரணை விளாத்திகுளம் சோலை மஹாலில் வைத்து மெகா பெட்டிசன் மேளாவாக நடைபெற்றது. இதில் பல்வேறுவிதமான 33 மனுக்கள் நல்ல முறையில் விசாரணை செய்யப்பட்டு முடிக்கப்பட்டது .