பாஜக, அமமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் அஇஅதிமுகவில் ஐக்கியம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தனர்.
தூத்துக்குடி 2023 மார்ச் 27;
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜக, அமமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் பண்டாரவிளை அதிமுக அலுவலகத்தில் வைத்து,
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாத்தான்குளம் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சாமத்துரை மற்றும் அமமுக அதிசயபுரம் கிளைச்செயலாளர் பட்டுதுரை, கிளை துணைச் செயலாளர் சேகர், பொருளாளர் ஆகாஷ, மேலமைப்பு பிரதிநிதி ஹரி கிருஷ்ணன், மாதேஷ் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் காசிராஜன், சாத்தான்குளம் யூனியன் துணை சேர்மன் அப்பாதுரை, ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை சேர்மன் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்