சுஷ்மிதா சென்னும், நடிகர் ரொஹ்மான் ஷாலும் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தவர்கள், சுஷ்மிதா சென்-க்கும் நடிகர் ரொஹ்மான் ஷாலும்-க்கும் 15 வயது வித்தியாசம்,இரண்டு ஆண்டு சேர்ந்து வாழ்ந்தவர்கள் பிரிந்தனர்.
புதுடெல்லி 2021 டிசம்பர் 24 ;90 களின் பிற்பகுதியில் பல இந்திய இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும், பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் சுஷ்மிதா சென். இந்தியா பெற்ற முதல் பிரபஞ்ச அழகியும் அவரே. 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வேண்ட சுஷ்மிதா சென், அதே ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டதையும் வென்று இந்திய இளைஞர்களின் மனத்தில் நீங்கா ஒரு இடத்தை பிடித்தார் எனலாம். 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா, மிஸ் யூனிவெர்ஸ் என இரு பட்டங்களையும் வென்றவர். 1994 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இவர் வாகை சூடினாலும், அப்போட்டிக்குச் செல்வதற்கான நுழைவு சீட்டாக அவருக்கு அமைந்தது அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டி. மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற சுஷ்மிதா சென், பெரிய விளம்பரங்களோ, எதிர்பார்ப்புகளோ இன்றி இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார். இறுதிச்சுற்று நாளன்று வரை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பேஷன் உலகுமே அவ்வாண்டின் வெற்றியாளராக வரப்போகிறவர் ஐஸ்வர்யா ராய் தான் என ஒரு ஏகமானதாக நம்பிக்கொண்டு இருந்தது. ஆனால் இறுதிச்சுற்றில் இந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்தெறியும் வகையில், யாரும் எதிர்பாரா வண்ணம் மிஸ் இந்தியாவாக வாகைசூடினார் சுஷ்மிதா சென்.
இறுதிச்சுற்றில் ஐஸ்வர்யா ராய் தான் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சுஷ்மிதா சென் அவருக்கு இணையான புள்ளிகளைப் பெற்றார். இதன் காரணமாக இருவருக்கும் மத்தியில் டைபிரேக்கர் கேள்வி கேட்கப்பட்டு, அதில் சிறப்பாகப் பதிலளித்த சுஷ்மிதா சென் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடம் பிடித்தார். என்னதான் இந்திய அழகி பட்டம் பெற்றாலும், அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல சுஷ்மிதா சென் பல தடைகளைத் தகர்க்க வேண்டியிருந்தது. மிஸ் இந்தியா போட்டியைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள சுஷ்மிதா சென் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சரியாக பிலிப்பைன்ஸ் செல்வதற்கான ஆயத்த பணிகளின் போது பாஸ்போர்ட்டை தவறவிட்டார் சுஷ்மிதா. மிஸ் இந்தியா வெற்றிக்குப் பின் மாடலிங் துறையில் மும்மரமாக இருந்த சுஷ்மிதா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அனுபமா வர்மா என்பவரிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்து வைத்திருந்துள்ளார். ஆனால் அனுபமா கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகக் கூற, அப்போதே துளிர் விட ஆரம்பித்திருந்த சுஷ்மிதாவின் மிஸ் யூனிவெர்ஸ் கனவு ஆரம்பிப்பதற்குள் கருகியது போல ஆகிவிட்டது. ஒருபுறம் பாஸ்போர்ட் பெறுவதற்கான முயற்சிகளை சுஷ்மிதாவின் குடும்பத்தார் மேற்கொள்ள, மறுபுறம் சுஷ்மிதாவுக்கு பதிலாக மிஸ் யூனிவெர்ஸ் போட்டிக்கு இந்தியா சார்பாக ஐஸ்வர்யா ராயை அனுப்பத் தயாராகியது இந்திய நடுவர்கள் குழு.
பரபரப்பான இறுதிக்கட்டத்தில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அப்போதைய மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட் உதவியுடன் பாஸ்போர்ட் சிக்கல்களைத் தீர்த்தார் சுஷ்மிதாவின் தந்தை. அதன்பின்னர் உலக அழகி போட்டிக்கு ஐஸ்வர்யா ராயும், மிஸ் யூனிவெர்ஸ் போட்டிக்கு சுஷ்மிதா சென்னும் செல்வதை இந்திய நடுவர்கள் குழு உறுதிப்படுத்தியது. இதனையடுத்து பிலிப்பைன்ஸ் சென்ற சுஷ்மிதா சென் அங்கு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட 76 பேரைத் தோற்கடித்து இறுதியில் 1994 ஆம் ஆண்டு இதேநாளில் பிரபஞ்ச அழகி பட்டத்தைச் சூடினார்.
இந்தியர் ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை சூடுவது அதுவே முதன்முறை என்பதால், பாலிவுட் முதல் ஒப்பனை பொருட்கள் தாயாரிக்கும் நிறுவனர் வரை அனைவரது கண்களும் சுஷ்மிதாவை நோக்கித் திரும்பியது. இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சுஷ்மிதா பல இந்திய மொழி திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து தனது ரசிகர் வட்டத்தை மேலும் பலமடங்காக்கினார். பாஸ்போர்ட் இல்லாமல் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழலில் தவித்த சுஷ்மிதா 2016 ஆம் ஆண்டு, அதே பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவராக பணியாற்றியதே அவரின் வெற்றிக்கும், அதன்பின் உள்ள கடின உழைப்பிற்கும் சூட்டப்பட்ட கிரீடமாகப் பார்க்கலாம்.
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணான சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மூத்த மகள் ரினி தன் அம்மா சுஷ்மிதா வழியில் நடிகையாக விரும்புகிறார்.இளைய மகள் அலிஷா பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்.சுஷ்மிதா சென்னும், நடிகர் ரொஹ்மான் ஷாலும் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். ரொஹ்மான், சுஷ்மிதாவை விட 15 வயது இளையவர். ரொஹ்மானுக்கும் சுஷ்மிதாவுக்கும் இடையே 15 வயது வித்தியாசம் உள்ளது. சுஷ்மிதாவுக்கு 46 வயது, ரொஹ்மானுக்கு 30 வயது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் முறையில் வாழ்ந்து வந்தனர்.கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டாக காதலித்து வந்த இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொஹ்மானை தன்னுடைய வீட்டில் இருந்து சுஷ்மிதா சென் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதனை உறுதிப்படுத்தும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாங்கள் நண்பர்களாக அறிமுகமானோம். நண்பர்களாக இருந்தோம்! எங்களது உறவு மிகவும் ஆழமானது. காதல் முறிந்து ரொம்ப நாளாச்சு... அன்பு அப்படியே இருக்கிறது. இனி யூகிக்க வேண்டாம். வாழ்க... வாழ விடுங்கள், பொன்னான நினைவுகள். நன்றி உன்னை நேசிக்கிறேன்!’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சுஷ்மிதா சென் தனது பதிவில் #nomorespeculations #liveandletlive #cherishedmemories #gratitude #love #friendship போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். இவர்களின் உறவு முறிந்தாலும், இருவருக்குள்ளும் காதல் குறையவில்லை என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.சுஷ்மிதாவின் போஸ்ட்டை பார்த்த ரொஹ்மானோ, எப்பொழுதுமே என்று கமெண்ட் அடித்து உள்ளார்.