Onetamil News Logo

ஸ்ரீபோத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ;அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நாம் இந்தியர் கட்சி நிறுவனத் தலைவர் ராஜா பெரியசாமி பங்கேற்பு 

Onetamil News
 

ஸ்ரீபோத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஸ்ரீபோத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சமூக மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நாம் இந்தியர் கட்சி நிறுவனத் தலைவர் ராஜா பெரியசாமி, அசோக் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.                                                                       தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் ஒட்டியுள்ள ஸ்ரீபோத்தி விநாயகர் ஆலயம் 1981இல் தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ பெரியசாமியால் சீரமைக்கப்பட்டு கடந்த 41 வருடங்களாக சிறப்பாக விழாக்கள் நடைபெற்று வருகின்றது. என் பெரியசாமி அவரது இறுதி காலம் வரை இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக இருந்தார். அவரை தொடர்ந்து அவரது பிள்ளைகளான அமைச்சர் கீதா ஜீவன் மேயர், மேயர் ஜெகன் பெரியசாமி, ராஜா பெரியசாமி,அசோக் பெரியசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். ஆனால் அவரது மகனான ராஜா பெரியசாமி இந்த கோவிலின் தர்மாகர்த்தாவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீபோத்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ராஜா பெரியசாமி , அசோக் பெரியசாமி, திமுக மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த் சேகரன், மாநகராட்சி கவுன்சிலர் கீதா முருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோட்டூராஜா, உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு அன்னதானத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இந்த அன்னதான விருந்து 7000 பேருக்கு மாலை 5 மணி வரை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo