ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன், அதியமான் தீவிர பிரச்சாரம்
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 21 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையொட்டி வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25 ஆகிய இரு தினங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தொகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனையை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர்களை நேரடியாக அவரது இல்லங்களுக்கே சென்று திமுக அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, துண்டு பிரசுரம் விநியோகித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக 51வது வார்டுக்கு உட்பட்ட அசோகபுரி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி மற்றும் ஈரோடு மாநகராட்சி 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் கருணா, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்