தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 1 மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து
தூத்துக்குடி தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 1 மாணவி காயத்ரி கலந்து கொண்டு, 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவி காயத்ரியை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் செல்வகுமாருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சண்முகம், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், காங் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியூசி ராஜ், தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பயிற்சியாளர் ஸ்டீபன், மாவட்ட திமுக பிரதிநிதி செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, வட்டப்பிரதிநிதிகள் துரை, பாஸ்கர், கருணா, மணி, அல்பட், மற்றும் மாணவியின் பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.