தூத்துக்குடியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி 2023 செப் 9 ;தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படயில் இந்தாண்டு செப்டம்பர் 1 முதல் 30 வரை ஊட்டச்சத்துமிக்க இந்தியா, எழுத்தறிவு பெற்ற இந்தியா, வலிமையான இந்தியா என்பதை வலியுறுத்தி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக குத்துவிளக்கு ஏற்றினார்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி தாலுகா அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, மாவட்ட சமூக நல அலுவலர் பொறுப்பு ரூபி பெர்ணான்டோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக் ராஜா, மாவட்ட திட்ட உதவியாளர் ஜெனிபா கிறிஸ்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர்கள் ஜெயாதுரைபாண்டியன், தாஜீன்னிஷா பேகம், காயத்ரி, திலகா, சண்முகப்பிரியா, புள்ளியல் ஆய்வாளர் முத்தரசி, சுகாதார பணிகள் துணை இணை இயக்குநர்கள் பொற்செல்வன், ஜெகவீரபாண்டியன், சுகாதார துறை அலுவலர்கள் கன்னியம்மாள், பகவதி, பத்மா, பெரியசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அலெக்ஸ், ஜேம்ஸ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் ஹேமலதா, பாதுகாப்பு அலுவலர் செல்வமெர்சி, உதவியாளர் சுபத்ரா, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட திமுக பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரெக்ஸ்லின், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட அரசு சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.