Onetamil News Logo

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.   

Onetamil News
 

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.     


தூத்துக்குடி 2021 நவம்பர் 22 ;தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
      தூத்துக்குடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை யொட்டி திமுக தலைமை கழகம் விருப்பமனு அளிப்பதற்கு மாவட்ட கழகம் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்ததையொட்டி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்பமனுவை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டு விண்ணப்பப்படிவத்தையும் வழங்கினார். இதில் பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சி பகுதியில் போட்டியிட பலர் ஆர்வமுடன் பெற்றுக்கொண்டனர். 
       நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாக்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் பிரதீப், மாவட்ட வழக்கிறிஞர் அணி துணைச்செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர பொறியாளர் அணி துணைச்செயலாளர் உலகநாதன், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் ரவி, சூர்யா, மற்றும் கீதா செல்வமாரியப்பன், பிரபாகர், அல்பர்ட், தங்கமாரியப்பன், ராஜா, லிங்கராஜா, மகேஸ்வரன் சிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo