Onetamil News Logo

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்   

Onetamil News
 

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்   


                                                                

தூத்துக்குடி 2023 மார்ச் 16; தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைத்து வருகின்றனர். 
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
இதனடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் குடியிருக்கும் பொதுமக்களிடம் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். 
அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி,  வீட்டு மனை பட்டா, பஸ் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதை கீதாஜீவன் கனிவோடு பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். 
நிகழ்;ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா,  மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார்,  மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண் சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், கந்தசாமி, வட்ட செயலாளர்கள் பாலு, கதிரேசன், செல்வராஜ், முத்துராஜா, சுப்பையா, செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், பாலு, வட்ட பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், தகவல் தொழில்நுட்ப அணி மார்க்கஸ் ராபர்ட், செந்தூர்பாண்டி, குழந்தைகள் நலக்குழு தலைவர் வக்கீல் ரூபன் கிஷோர், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, அற்புதராஜ் மற்றும் அல்பட், மணி, சந்தனமாரி, மதிமுக சார்பில் மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாராஜன், மாநில தொண்டரணி செயலாளர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணபெருமாள் உள்ளிட்டோர் அளித்த கோரிக்கை மனுவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்களின் குறைகளை தீர்க்கவும், கட்டபொம்மன் நகர் நான்கு முக்கு சந்திப்பில் மின்கோபுரம் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை மனு அளித்தனர். பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை அவரது உதவியாளர் கல்யாண சுந்தரம் குறிப்பெடுத்துக் கொண்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo