Onetamil News Logo

தாய்பால் வாரவிழாவையொட்டி கோலப்போட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

Onetamil News
 

தாய்பால் வாரவிழாவையொட்டி கோலப்போட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.         


தூத்துக்குடி 2022 ஆகஸ்ட் 1 ;தூத்துக்குடியில் தாய்பால் வாரவிழாவையொட்டி கோலப்போட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி தாய்பால் வார விழாவையொட்டி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி கோளரங்கம் முன்பு நடைபெற்ற கோலப்போட்டியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட குழும இயக்குநர் அமுதவல்லி, கலெக்டர் செந்தில்ராஜ், ஆகியோர் துவக்கி வைத்தனர்.
   பின்னர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்அனு வாகனத்தில் திரையிடப்படும் தாய்பால் வாரவிழா குரும்படத்தினை பார்வையிட்டு அரசு மருத்துவமனை கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
விழாவில் சுகாதரார பணிகள் இணை இயக்குநர் பொன்செல்வன், மருத்துவ கல்லூரி இணை இயக்குநர் பொன் இசக்கி, மருத்துவ கல்லூரி பொறுப்பு டீன் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், தாசில்தார் செல்வகுமார், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ரதிதேவி,  சுகாதார அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளா துரைமணி, மற்றும் மணி, செந்தில்குமார், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாய்பால் முக்கியத்துவம் குறித்து 27 கோலங்களிலும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு மண்டலங்கள் சார்பிலும் தூத்துக்குடி மாவட்ட 12 ஊராட்சி ஓன்றிய அலுவலகங்கள் சார்பிலும் மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவிகள் சார்பில் இரண்டு கோலங்கள் உள்பட 27 கோலங்கள் போட்ப்பட்டிருந்தன. அதில் ஓரு கோலத்தில் தடுப்பூசியை காட்டிலும் நோய் தீர்க்கும் மருந்து தாய்பால் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo