தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
திருநெல்வேலி 2022 நவம்பர் 29: தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் லெவிஞ்சிபுரம் முதல்தெரு இரண்டாவது தெரு பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் கழிவுநீர் கால்வாய் பணியினை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுரேஷ் பிரதிநிதிகள் ரஜினிமுருகன், முத்து, சதிஷ்குமார், முருகன், நடராஜன், மற்றும் அல்பட், மணி, உள்பட பலர் சென்றனர்.