தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசிவிஸ்வநாதன் இல்ல திருமண விழா அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான காசிவிஸ்வநாதன் இல்ல திருமண விழா தூத்துக்குடி கமலவேல் மஹாலில் நடைபெற்றது.
காசி விஸ்வநாதன் - சசிகலா தம்பதியரின் மகன் நிஷாந்த், பழனியை சேர்ந்த ஈஸ்வரன்-ஜோதி தம்பதியரின் மகள் சிவரஞ்சனி ஆகியோரது திருமணம், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நல்லாசியுடனும், திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடனும் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் நடைபெற்ற திருமணம் விழா மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நிச்சயதார்த்த விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டார்.
திருமண விழாவில் தலைமை வழக்கறிஞரணி சூர்யா வெற்றிகொண்டான், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், தலைமைக் வழக்கறிஞர் அணி கவி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சிவபெருமாள், சுந்தர்ராஜ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூரி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, அன்புராஜ், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், முருகேசன், கருப்பசாமி, இளையராஜா, சரவணக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, தெற்கு வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், ரமேஷ், அபிராமி நாதன், மோகன்தாஸ், ராமர், ரகுராமன், பூங்குமார், ஜோதிராஜா, நாகராஜன் பாபு, மாரிச்செல்வம், பிளோமின்ராஜ், கணேசன், ரெங்கசாமி, அம்பாசங்கர், ஆபிரகாம், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், கோபி, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், மாநில பேச்சாளர் சரத்பாலா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், சிவகுமார், நிர்வாகிகள் அஜய்கோஸ், ரவி, சூர்யா, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி, சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் செல்வகுமார், செந்தில்குமார், முன்னாள் அறங்காலகுழு தலைவர் கிருஷ்ண மூர்த்தி, அதிமுக முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி முனியசாமி, ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், தேமுதிக மாநில தேர்தல் பணிக்குழு துணைச்செயலாளர் ஆறுமுகநயினார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் புவிராஜ், வக்கீல்கள் சந்தனசேகர், கனகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆதிலிங்கம், முத்துலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் ராஜசேகர், தாசில்தார்கள் செல்வகுமார், நிஷாந்தினி, தொழிலதிபர்கள் சுதன்கீலர், எடிசன், காசிராஜன், விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ராம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அமலா ஜெஸிஜேக்குலின், மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், மணிராஜ், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், கூட்டுறவு சங்க செயலாளர் சங்கர், முத்துகருப்பன் நினைவுப்பள்ளி செயலாளர் கருப்பசாமி, மேலாளர் ஸ்டீபன், தமிழன்டா கலைக்குழு மாநில தலைவர் ஜெகஜீவன், திமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, பேரூராட்சி, ஊராட்;சி, மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பல்வேறு அணியைச் சார்ந்த நிர்வாகிகள் பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவரும், ஒன்றிய துணை பெருந்தலைவருமான காசிவிஸ்வநாதன், சசிகலா, ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.