Onetamil News Logo

மரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்தினரை  அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.   

Onetamil News
 

மரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்தினரை  அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.   


தூத்துக்குடி  2020 நவம்பர் 20 வெள்ளிக்கிழமை ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் லடாக்கில் நடந்த விபத்தில் மரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தினரை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் லடாக்கில் நடந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமி அவர்களின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் இன்று  நேரில் சந்தித்து அவரது திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆறுதல் கூறினார்கள்.

மேலும்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி கருப்பசாமி அவர்களின் மனைவி தமயந்தி அவர்களிடம் வழங்கினார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு  தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தங்கள் எந்த நேரத்தில் என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், தங்கள் இல்லத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவேன் எனவும் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் கிராமத்தை கருப்பசாமி என்பவர் 14 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அதுபோல தற்பொழுது லடாக் பகுதியிலே நாயக் நிலையில் பணியாற்றி வந்திருக்கிறார். நேற்றைய தினம் அங்கு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அவர் பலியான தகவல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானது மட்டுமல்லாமல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கே வேதனை அளிக்க கூடிய ஒரு அதிர்ச்சியான சம்பவம். இந்த துயரமான நேரத்திலே அந்த குடும்பத்துக்கு எனது ஆறுதலையும்,  முதலமைச்சர் சார்பிலே ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது பகுதியிலே எண்ணற்ற ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு சவலாப்பேரியிலே சுப்பிரமணியன் என்பவர் புல்வாமா பகுதியிலே வெடிவிபத்திலே பலியானார்கள். அந்த குடும்பத்துக்கு அரசின் சார்பாக செய்ய வேண்டிய நிவாரணம் அனைத்தையும்  முதலமைச்சர் அறிவித்தார்கள். கருப்பசாமி அவர்களின் குடும்பத்துக்கு  முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக ஆறுதல் கூறவும் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஆலோசனை வழங்கியது மட்டுமல்லாமல் ராணுவத்தில் இருந்து அறிக்கை பெறப்பட்டவுடன் விபத்து நடந்திருக்கின்ற காரணத்தையும்;, விபத்து எப்படி நடந்தது என்ன என்பதை விசாரித்து வருகின்றார் இந்த  தகவல் இன்றைக்கு அரசுக்கு எட்டியிருக்கிறது. அதன் மூலமாக அந்த அரசுக்கு முழு தகவல் பெறப்பட்டவுடன் அந்த குடும்பத்துக்கு செய்ய வேண்டிய அத்தனை நிவாரணத்தையும் அந்த குடும்பத்திற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதாக  முதலமைச்சர்  தெரிவித்து இருக்கின்றார். உடனடியாக நிவாரணத்தொகையும் அறிவிப்பார். குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் அறிவிப்பார்.  
                  நான் என்னுடைய தொகுதி என்ற முறையிலே என்னுடைய சொந்த பொறுப்பிலே இன்றைக்கு நிதி உதவி செய்திருக்கின்றேன். அவர்கள் கல்விக்கு தகுந்த வேலையை அவருடைய மனைவி தமயந்தி பி.எஸ்.சி. பி.எட். பட்டய படிப்பு படித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த கல்விக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும் என்று சொல்லி நான்  முதலமைச்சர் அவர்களிடம் அறிவுறுத்தி நிச்சயமாக அந்த வேலையை பெற்றுத்தருவேன். இதுபோக 2 பெண் குழந்தைகளும், ஒரு ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருக்கிறது. எதிர்கால நலன் கருதி அரசு செய்கின்ற உதவி போக என்னுடைய சொந்த பொறுப்பிலே அந்த குடும்பத்திற்கு உதவி செய்வேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன். மீண்டும் அந்த குடும்பத்தாருக்கு, அவரை இழந்து வாடும் தாய், தந்தை மற்றும் அத்தனை உறவினர்களுக்கும் இந்த நேரத்திலே நான் நெஞ்சார்ந்த ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுமட்டுமல்லாமல் இவர்கள் இன்றைக்கு ராணுவத்தில் பணி புரிகின்றார்கள் விடுதலை போராட்ட வீரர்களுக்கு சமமானவர்கள். 

நமது இதே ஊரிலே இமானுவேல் சேகரன் சிலை இருக்கிறது. இந்த தியாகி இமானுவேல் சேகரன் எல்லாம் நாட்டு விடுதலைக்கு போராடியவர். அன்றைக்கு நாம் அடிமைப்பட்டிருந்த காலத்திலே நமது நாட்டிலே தூத்துக்குடி மாவட்டம்தான் வீரர்களை அதிகமான கொண்ட மண்.  இங்கு வீரபாண்டியகட்டபொம்மன், எட்டயபுரத்தில் பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., சுந்தரலிங்கனார் மற்றும் வாஞ்சிநாதன், அழகுமுத்துக்கோன் போன்ற எண்ணற்ற தியாக சீலர்களை, விடுதலை போராட்ட வீரர்களை இருந்ததை போலத்தான் அந்த காலத்திலே அந்த விடுதலை போராட்ட வீரர்கள் நமது நாட்டு விடுதலைக்கு போரிட்டார்கள். இன்றைக்கு ராணுவத்தில் கருப்பசாமி போன்ற வீரர்கள் எல்லாம் அங்கே லடாக் பகுதியிலே அது திபெக் எல்லை பகுதியில் அமைந்திருக்கிறது. அந்த எல்லை பகுதியில் தனது உயிரை பணயம் வைத்து பணியாற்றியதால்தான் நாம் இங்கு நிம்மதியாக நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த வகையிலே பார்த்தால் இன்றைக்கு இவர்கள்தான் விடுதலை வீரர்கள். அவருடைய வீரத்திற்கு வீரவணக்கத்தை நான் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அன்புராஜ், சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo