Onetamil News Logo

கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்கெட் பகுதியில் உள்ள சாக்கடை வடிகால் பகுதிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பார்வையிட்டு ஆய்வு 

Onetamil News
 

கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்கெட் பகுதியில் உள்ள சாக்கடை வடிகால் பகுதிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பார்வையிட்டு ஆய்வு 


கோவில்பட்டி  2020 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்கெட் பகுதியில் உள்ள சாக்கடை வடிகால் பகுதிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பார்வையிட்டார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி வற்றிய சாக்கடை வடிகால் பகுதிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று  பார்வையிட்டார்.  தொடர்ந்து அலுவலர்களுக்கு அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மண் அடைப்புகளை தூர்வாறி மணல்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறை, நகராட்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிகமான மழை பெய்யும்.  தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் ஒரு சில பகுதியில் வடிகால் வசதி சரியாக இல்லாமல் ஆங்காங்கே நீர் தேங்கி வணிக வளாக பகுதிகளிலும், பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காத வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலே சாலை விரிவாக்க பணியின்போது ஓடை மற்றும் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வந்தது. ஒருசிலர் நீதிமன்றத்தை நாடி காரணத்தால் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. அதன் காரணமாகத்தான் தினசரி மார்கெட் பகுதியில் நேற்றைய மழையின்போது சிறிய சேதம் ஏற்பட்டது. அவைகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவசர கால பணியாக இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாறி செப்பனிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர கால பணியாக இவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறையுடன் இணைந்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை அமைத்தல் தொடர்பான நீதிமன்ற வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

 இந்த ஆய்வின்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா,கோவில்பட்டி வட்டாச்சியர் மணிகண்டன், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன்,  அஇஅதிமுக வடக்கு மாவட்ட பொருளாளர் தூத்துக்குடி தொழிலதிபர் M.R.S.ஆரோன் மோசஸ், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் சவரிமங்கலம் ஆர்.முத்துசாமி ,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி கே.ஜெயக்குமார்,தொழிலதிபர் சுதன்,வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் வக்கீல் ஸ்ரீனிவாசன் , மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo