Onetamil News Logo

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் செவிலியர் குடியிருப்பு காணொலி மூலம் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் செவிலியர் குடியிருப்பு காணொலி மூலம் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 செவிலியற் குடியிருப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். அதன்பின் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
             நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மேக்லின் கலிஸ்டா, மாப்பிள்ளையூரணி வார்டு உறுப்பினர் மகேஸ்வரி காமராஜ், கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மற்றும் கௌதம், சுகாதார ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், ஆஷிக், பிரதீப் செய்திருந்தார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo